கேரள கோரத்துக்கு இடையே.. சபரிமலை செல்லும் பக்தர்கள்.. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
திருவனந்தபுரம்: வரும் 3, 4 ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடி அமாவாசை வரும் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வரும் 4 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் நதிக்கரை ஓரத்தில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வாக இது நடைபெறுகிறது. அது மட்டும் இன்றி முக்கிய கோவில்களுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். கேரளாவில் பேய்மழை பெய்து வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டு 3 நாட்கள் ஆகியும் இன்னும் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கிவிட்டது. கேரளா மட்டும் இன்றி மொத்த தேசத்தையும் வயநாடு நிலச்சரிவு உலுக்கியுள்ளது. இத்தகைய சோக சம்பவத்திற்கு இடையே இந்த ஆண்டு பலி தர்ப்பண நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்தகைய சூழலில், கேரள உயர் நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல்துறை மற்றும் தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வரக்கூடிய பக்தர்கள் பாதுகாப்பான முறையில் வழிபாடுகளை செய்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை எந்த வித பிரச்சினையும் இன்றி செய்து கொடுக்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெள்ளம், பெருமழை போன்றவற்றால் கடுமையான பாதிப்பை கேரளா சந்தித்து இருக்கக் கூடிய சூழலில், அம்மாநில உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications