பொருட்களை எடுக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்.. இடுக்கி நிலச்சரிவில் ஒருவர் பலி.. பெண் படுகாயம்!

Subscribe to Oneindia Tamil

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பிஜி என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள பொருட்களை எடுக்க பிஜுவும் அவரது மனைவியும் சென்றபோது நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

தொடர் மழையால் சாலை பணி நடக்கும் இடத்தில் மண்சரிவு ஏற்படும் என அதிகாரிகள் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் அறிவுறுத்தலால் 22 வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

landslide idukki kerala

இடுக்கி மாவட்டத்தின் அடிமாலி தேசிய நெடுஞ்சாலையில் வீடுகள் இருக்கும் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்து, அப்பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைத்தனர். எனினும் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு அங்குள்ள ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் இருவர் சிக்கிக்கொண்ட் நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நிலச்சரிவு ஏற்பட்ட தகவல் கிடைத்ததும் உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக் குழுவினர் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சுமார் ஏழு மணி நேரம் மீட்புப் பணியை மேற்கொண்டனர். இறுதியில் இருவரும் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டாலும், பிஜு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சந்தியா மேல் சிகிச்சைக்காக ராஜகிரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தம்பதியர் கான்கிரீட் கற்றைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. அவர்கள் கனமான கான்கிரீட் கற்றைகள் மற்றும் இடிந்து விழுந்த சுவரின் சில பகுதிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டனர், படுக்கைக்கும் அலமாரிக்கும் இடையில் சிக்கிக் கொண்டனர். விபத்து நடந்த இடத்திலிருந்து மண்ணை அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக வீட்டின் அருகே ஒரு பெரிய மலை இடிக்கப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், இதனால் சரிவின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருந்த நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மலைப்பகுதிகளில் இருந்த ரிசார்ட்கள், வீடுகள் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவில் 318 பேர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய தாக்கமே கேரள மக்கள் மனதில் ஆறாத ரணமாக உள்ள நிலையில், மீண்டும் அம்மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பலி நிகழ்ந்துள்ள சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை காரணமாக மிகப்பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+