2வது நாளாக 30 ஆயிரம்+ கேஸ்கள்.. 1 லட்சத்திற்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ்கள்.. கேரளாவில் மோசமான நிலை
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு நேற்று 30,077 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.
கேரளாவில் நேற்று முதல்நாள் 31445 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவதால் ஆக்டிவ் கேஸ்கள் 1,81,230 ஆக உயர்ந்துள்ளது. அதோடு அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் பலியாகி உள்ளனர்.
20,134 பேர் கேரளாவில் இதுவரை பலியாகி உள்ளனர். 37,11,625 அங்கு இதுவரை குணமாகி உள்ளனர். கேரளாவில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவது அங்கு மூன்றாம் அலை ஏற்பட்டுவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் இந்தியாவிலேயே அதிக ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. கேரளாவில் இப்போது 1 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் உள்ளன. இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு ஆக்டிவ் கேஸ்கள் இல்லை. 4 மாநிலங்களில் 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கேஸ்கள் உள்ளன. 31 மாவட்டங்களில் 10 ஆயிரத்திற்கும் குறைவான ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.
இந்தியாவில் தினமும் பதிவாகும் புதிய கேஸ்களில் 51 சதவிகித கேஸ்கள் கேரளாவில்தான் பதிவாகிறது. இந்தியாவின் மொத்த கேஸ்களில் பாதி அங்கிருந்து வருகிறது. கேரளாவில் உடனடியாக கொரோனா சோதனைகளை உயர்த்த வேண்டும். அங்கு காண்டாக்ட் டிரேசிங்கை அதிகரிக்க வேண்டும். அங்கு காண்டாக்ட் டிரேசிங் குறைவாகவே செய்யப்படுகிறது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தீவிரமாக சோதிக்கப்பட வேண்டும். அங்கு 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வீட்டில்தான் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்கள். இவர்களை முறையாக கண்காணிக்க வேண்டும், என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இப்படி தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருவது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications