கொரோனாவிற்கு இடையே கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதல்.. சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி!
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதலால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில சுகாதாரத்துறை சில நிமிடங்களுக்கு முன் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. கடுமையான நிபா தாக்குதலுடன் அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மரணம் அடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கேரளாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. அங்கு கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது. கேரளாவில் 41,81,137 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடத்த 24 மணி நேரத்தில் 29682 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு 2,50,097 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கு 39,09,096 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25910 பேர் அங்கு குணமடைந்து உள்ளனர். அங்கு இதுவரை மொத்தமாக 21,422 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் எவ்வளவு கட்டுப்பாடுகள் கொண்டு வந்தும் கேஸ்கள் மட்டும் குறையவில்லை.

கொரோனா
இந்த நிலையில்தான் கேரளாவில் கொரோனா பரவலுக்கு இடையே அங்கு கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அந்த சிறுவனின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அறிகுறிகள் தீவிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடுமையான நிபா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

உறுதி
அவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தும் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இவரின் ரத்த மற்றும் சளி மாதிரிகள் ஆழப்புழாவிற்கு சோதனைக்கு இன்று காலை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான முடிவு வந்த சில நிமிடங்களில் அந்த சிறுவன் பலியானார். மாநில சுகாதாரத்துறை சற்றுமுன் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது. நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் திறன் கொண்டது ஆகும். இதனால் அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சிறுவன்
அதோடு இந்த சிறுவனோடு நெருக்கமாக இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். நிபா வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவும். பன்றிகள், வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்கு இது பரவும். 1998ஆம் ஆண்டு முதன்முதலில் மலேஷியாவில் இந்த வைரசால் நோய் தொற்று ஏற்பட்டது. அதன்பின் உலகின் பல்வேறு நாடுகளில் இந்த வைரஸ் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளா
அதன்பின் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இதே வைரஸ் பரவல் ஏற்பட்டது. கடந்த 2018ல் கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதே வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. அப்போது கோழிக்கோடு மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வௌவாலை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி ஒருவர் மூலம் இது பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இதற்கான உறுதியான காரணம் அப்போதும் தெரியவில்லை.

காரணம்
அப்போது இந்த பரவல் காரணமாக கேரளாவில் 17 பேர் பலியானார்கள். அதன்பின் மீண்டும் கேரளாவில் 2019ல் நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. ஆனால் அப்போது பெரிய அளவில் இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இரண்டு முறையும் கேரளாவில் மிகுந்த கட்டுப்பாட்டிற்கு பின் நிபா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு மீண்டும் சிறுவன் ஒருவருக்கு இந்த வைரஸ் அறிகுறி ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிர்ச்சி
இந்த வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலகில் எங்கும் இதற்கு சிகிச்சை முறை என்ன என்றும் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேபோல் வேக்சினும் இதற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் அபாயம் கொண்டது இந்த வைரஸால் மக்களிடையே பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும் கோழிக்கோட்டில் மீண்டும் இந்த வைரஸ் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அறிகுறி
நிபா வைரஸ் தாக்கிய ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் இந்த அறிகுறிகள் தென்படும். அறிகுறி ஏற்படாமலே ஒருவர் இன்னொருவருக்கு வைரஸை பரப்ப முடியும். நிபா வைரஸ் காரணமாக, கடும் காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்படும். இது இயல்பான அறிகுறி என்றாலும் மூளை வீக்கம், மனக்குழப்பம் போன்ற கடுமையான அறிகுறிகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் சுவாசப் பிரச்சனைகள் முக்கியமான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
-
கேரளாவை உலுக்கும் ஷிகெல்லா.. தமிழ்நாட்டுக்குள் ஜாலியாக உலா வரும் வாகனங்கள்! கலக்கத்தில் கன்னியாகுமரி -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications