திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பொக்கை பாட்டியும்.. ஸ்டாலினும்.." தமிழ்நாட்டை வியந்து பார்த்த கேரளம்.. பாராட்டி தள்ளும் ஊடகங்கள்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் ரேஷன் கார்ட் வைத்து இருப்பவர்களுக்கு 4000 ரூபாய் நிதி அளிக்கப்படும் திட்டத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்புகிடைத்துள்ளது.

Recommended Video

    ரேஷன் கடைக்கு திடீரென சென்ற முதல்வர் Stalin மற்றும் Udhayanidhi Stalin .. பரபரத்த Royapettah

    கேரளாவில் கடந்த 5 வருடமாக முதல்வர் பினராயி விஜயனின் ஆட்சி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று பினராயி விஜயன் முதல்வராகி உள்ளார். அவரின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் பல்வேறு முக்கிய திட்டங்களை கொண்டு வந்தார், கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

    இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை இணையதள சேவையை முடக்குவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.. ஜி 7 நாடுகள், இந்தியா வெளியிட்ட கூட்டறிக்கை

    பினராயி விஜயன் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு ஊடகங்களும், தமிழ்நாடு மக்களும் இணையத்தில் கடந்த 5 வருடங்களில் பாராட்டிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. லாக்டவுன் காலத்தில் மாணவ, மாணவிகளின் வீட்டிற்கே மதிய உணவு வழங்கும் திட்டங்களை தமிழ்நாட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

     பாராட்டு

    பாராட்டு

    கேரள முதல்வர் பினராயி விஜயனின் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் பாராட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் திட்டங்கள் கேரளாவில் பாராட்டுகளை பெறுகின்றன. முக்கியமாக தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு கேரளாவில் பாராட்டுகளை பெற்றது.

    கோவில்

    கோவில்

    அதன்பின் கோவில்களில் பெண்கள் அர்ச்சகர் ஆகும் திட்டத்திற்கு கேரளாவில் ஊடகங்கள் வியந்து பாராட்டு தெரிவித்தன. கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் நுழையவே பிரச்சனை இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிற்குள் கருவறைக்குள் செல்லும் அளவிற்கு தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வருவது கேரளாவை வியந்து பார்க்க வைத்துள்ளது.

    ரேஷன்

    ரேஷன்

    இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்ட் வைத்து இருப்பவர்களுக்கு 4000 ரூபாய் நிதி அளிக்கப்படும் திட்டத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக கடந்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக இந்த மாதமும் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2000 ரூபாயுடன் கூடிய 14 உணவு பொருட்கள் அடங்கியத் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

     வரவேற்பு

    வரவேற்பு

    தமிழ்நாடு மக்கள் இடையே இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட நாகர்கோவிலை சேர்ந்த வேலம்மாள் என்ற பாட்டி இணையத்தில் வைரலானார். கையில் பணத்தோடு இந்த பாட்டி சிரித்த புகைப்படம் இணையத்தில் பெரிய வைரலானது. இந்த புகைப்படத்தை முதல்வர் ஸ்டாலினும் பகிர்ந்து இருந்தார்.

     பாராட்டு

    பாராட்டு

    இதே பாட்டியின் புகைப்படத்தை கேரள ஊடகங்களும் பகிர்ந்து.. தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டி உள்ளன. கேரள பத்திரிக்கை ஒன்றில் பாட்டியின் புகைப்படத்தோடு செய்தி வெளியாகி உள்ளது. அதேபோல் கேரள செய்தி சேனல்களும் பொக்கை வாய் பாட்டியின் சிரிப்பும், முதல்வர் ஸ்டாலினும் திட்டமும் என்ற தலைப்பிலும் இதை பற்றி செய்தி வெளியிட்டு இருக்கிறார்.

     புகைப்படம்

    புகைப்படம்

    இந்த புகைப்படத்தை எடுத்த நிருபர் ஜாக்சனுக்கும் கேரள ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. பாட்டிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த புகைப்பட நிருபர் ஜாக்சன் அந்த பாட்டிக்கு 2000 ரூபாய் வழங்கி இருக்கிறார். இதையும் பாராட்டி கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    English summary
    Kerala media praises Tamilnadu government scheme of giving Rs.4000 and special package to ration card holders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X