"ஆபரேஷன் செய்யும் போதும் ஹிஜாப்.." உடனே அனுமதி தாங்க.. மருத்துவ கல்லூரி மாணவிகள் திடீர் கோரிக்கை
திருவனந்தபுரம்: ஆபரேஷன் செய்யும் போது ஹிஜாப் அணிவது தொடர்பாக அனுமதியளிக்க வேண்டும் எனக் கேரள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்தாண்டு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது அனைவருக்கும் தெரியும். அங்கே கடந்தாண்டு மாணவ, மாணவியர் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர்கள் பெரும் போராட்டம் நடத்திய போதிலும், அப்போது இருந்து பசரவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு விதியை மாற்றவில்லை. நீதிமன்ற தீர்ப்பும் கர்நாடக அரசின் நிலைப்பாட்டை ஒட்டியே வந்தது.

ஹிஜாப்: இதற்கிடையே இப்போது மீண்டும் ஹிஜாப் விவகாரம் பேசுபொருள் ஆகியுள்ளது. இந்த முறை நமது மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து.,. அங்கே ஆப்ரேஷன் தியேட்டரில் ஹிஜாப் அணிய அனுமதிப்பது தொடர்பாக மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்..
தங்கள் மத நம்பிக்கையின்படி, முஸ்லிம் பெண்கள் எந்த சூழ்நிலையிலும் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதால் அதற்கு அனுமதிக்க வேண்டும் எனத் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்
கடிதம்: அந்த கடிதத்தில், "இங்கே ஹிஜாப் அணியும் முஸ்லீம்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். மத உடைகளை அணிந்து அதேவேலையில் மருத்துவமனை மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகளுக்கு இணங்கும் வகையிலான சமநிலையைக் கண்டறிவது அவசியம்" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகின் பிற பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆப்ரேஷன் தியேட்டர்களில் எந்த மாதிரியான உடைகளை அணிகிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் நாம் அதுபோன்ற உடைகளை அணியலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
நீண்ட கை கொண்ட மேல்சட்டைகள், ஆப்ரேஷன் தியேட்டருக்கு என இருக்கும் தலையைக் கவர் செய்யும் வகையிலான ஆடைகளை அணியலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் தியேட்டர் விதிமுறைகள், மத நம்பிக்கையான ஹிஜாப் என இரண்டிற்கும் இடையேயான சமநிலையைக் கண்டறிய முடிவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. எனவே, இதற்குக் கல்லூரி முதல்வர் அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

என்ன சொல்கிறார்: இதற்கிடையே மாணவிகளின் கோரிக்கை குறித்து விவாதிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டாக்டர் லினெட் மோரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மாணவிகளின் கோரிக்கையை இப்போது ஏற்க முடியாது. ஆபரேஷன் தியேட்டர்களில் சர்வதேச தரம் பின்பற்றப்படுகிறது. அங்கே அனைத்தையும் விட நோயாளியின் பாதுகாப்பே முக்கியம்.
இந்த விவகாரத்தில் நாம் தானாக முடிவு எடுக்க முடியாது. இது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தரும் அடிப்படையில் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் தீர்வு காணப்படும்" என்றார்.
முன்னதாக கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஐகோர்ட் கர்நாடக அரசுக்குச் சாதமாகத் தீர்ப்பு கொடுத்தது. இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இரு நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இரு வேறு தீர்ப்புகளை அளித்தன. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications