உப்புமா வேணாம்..பிரியாணி, பொரிச்ச கோழி தான் வேணும்! மழலை மொழியில் சொன்ன ஷங்கு..ஓகே சொன்ன அமைச்சர்
திருவனந்தபுரம்: அங்கன்வாடியில் தினமும் உப்புமா தான் தரப்படுவதாகவும், இனிமேல் பிர்னானி ( பிரியாணி ) பொரிச்ச கோழி தான் வழங்க வேண்டும் என குழந்தை ஒன்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், குழந்தையின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்துள்ளார் கேரளா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
தமிழகத்தை போலவே இந்தியா முழுவதும் மத்திய அரசு சார்பில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், சீருடைகள், கல்வி கற்கும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.
அதில் தொப்பி அணிந்து பேசிய ஷங்கு என்ற குழந்தை தங்கள் அங்கன்வாடியில் தினமும் உப்புமா தான் வழங்குகிறார்கள். உப்மாவுக்கு பதிலாக பிர்னாணி ( பிரியாணி ) மற்றும் பொரிச்ச கோழி வேண்டும் என தனது தாயிடம் கேட்டிருந்தார். அவ்வாறு பேசிக் கொண்டே குழந்தையை சமாளித்து உணவு ஊட்டி இருந்தார். அந்த தாய் அந்த வீடியோவை ஷங்குவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதனை ட்ரெண்ட் ஆக்கினர்.
இந்த நிலையில் இந்த வீடியோ கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அந்த வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேஸ்புக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்,' ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக் கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும். அவர் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வழங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரளா அரசாங்கத்திற்கு அங்கன்வாடிகள் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஷங்குவின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும், அங்கன்வாடி மெனு மாற்றப்படும்" எனக் கூறியிருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications