திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா-நீட் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம்-மேலும் 2 ஆசிரியர்கள் கைது- சிக்கியோர் எண்ணிக்கை 7 !

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரத்தில் மேலும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    Neet Exam-ல் மாணவியின் உள்ளாடையை கழற்றச் சொன்ன கண்காணிப்பாளர்கள் | விஸ்வரூபமெடுக்கும் விசாரணை

    மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் தேர்வு மையங்களில் மாணவிகள் மிக கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    டெல்லிக்கு நாளையே பறக்கும் எடப்பாடி.. மோடி, அமித் ஷாவை நேரில் சந்திக்க முடிவு? 3 முக்கிய காரணங்கள்? டெல்லிக்கு நாளையே பறக்கும் எடப்பாடி.. மோடி, அமித் ஷாவை நேரில் சந்திக்க முடிவு? 3 முக்கிய காரணங்கள்?

    ஒவ்வொரு நீட் தேர்வின் போதும் இத்தகைய கெடுபிடிகள் சர்ச்சையாவது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இம்முறை கேரளாவில் நடந்த கெடுபிடிகள் ஒட்டுமொத்த நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கேரளா நீட் தேர்வு

    கேரளா நீட் தேர்வு

    கேரளாவின் கொல்லம் ஆயூரில் உள்ள மார்தோமா தகவல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு மையத்திலும் நீட் முகாமை குறிப்பிட்ட ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பான சோதனைகளும் நடத்தப்பட்டன. ஆனால் இதனையும் மீறி இம்மையத்தில் மாணவிகளிடம் காட்டப்பட்ட கடுமைதான் நெஞ்சை பதற வைக்கச் செய்கிறது.

    மாணவிகளின் உள்ளாடைகள் கழற்றினர்

    மாணவிகளின் உள்ளாடைகள் கழற்றினர்

    இத்தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றினால்தான் தேர்வு மையத்துக்குள் அனுமதிப்போம் என கெடுபிடி காட்டி உள்ளனர். அப்படி உள்ளாடைகளை களைய மறுத்த மாணவிகளுக்கு நீட் தேர்வு எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. தேர்வு எழுதச் செல்லும் போது, உள்ளாடைகளை கழற்ற வேண்டிய கொடுமை நேர்ந்ததால் பல மாணவிகள் தேர்வை எழுதவும் இல்லை.. அப்படி எழுதியவர்களும் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகினர்.

    வெடித்தது போராட்டம்

    வெடித்தது போராட்டம்

    இது தொடர்பாக மாணவிகள் பெற்றோரிடம் குமுறி அழுதனர். இதனையடுத்தே இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவி அதிர்ச்சியையும் கடுமையான கண்டனத்தையும் எதிர்கொண்டது. கேரளா அரசு தரப்போ, நீட் ஏஜென்சிதான் இத்தகைய கெடுபிடிகளுக்கு காரணம் என பாய்ந்தது. அதேநேரத்தில் மாணவிகளிடம் இப்படி நடந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி தேர்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். அங்கு பெரும் பதற்றத்தையும் இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்தது.

    மொத்தம் 7 பேர் கைது

    மொத்தம் 7 பேர் கைது

    மேலும் மாணவிகளின் உள்ளாடைகளை களைந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் 2 ஆசிரியர்களும் கேரளா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த பிரச்சனையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    English summary
    Two more arrested in Kerala NEET controversy Row.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X