கேரள ஓணம் பம்பர்.. 30 கோடி பரிசு விழுந்தும் தமிழக நபர் ஏமாற்றப்பட்டாரா? என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள ஓணம் பம்பரில் முதல் பரிசு ரூ.30 கோடி தனக்கு தான் விழுந்ததாக கேரளாவை சேர்ந்த நபர், தன் அடையாளத்தை வெளியில் கூறாமல் ரகசியமாக வாங்கி சென்றார். இந்நிலையில் திடீர் திருப்பமாக முதல் பரிசு ரூ.30 கோடி தனக்கு தான் விழுந்ததாகவும், டிக்கெட் தொலைந்துவிட்டதாகவும் தமிழகத்தை சேர்ந்த சாதிக் என்பவர் கேரள எஸ்பி ஆபிசில் புகார் அளித்துள்ளது லாட்டரி பிரியர்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது. யாருக்கு தான் உண்மையில் பரிசு அடித்தது என லாட்டரி பிரியர்களும் குழம்பி போயுள்ளனர்.

கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரியில், ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டதால் இனிமேல் அதிர்ஷ்டசாலி டிக்கெட் உடன் வரும் வாய்ப்பு குறைவுதான் என கேரள லாட்டரி பிரியர்கள் பேசிக்கொண்டு இருந்த நிலையில் திடீர் திருப்பமாக நேற்று லாட்டரியில் முதல் பரிசு ரூ.30 கோடி வென்றவர் டிக்கெட் உடன் வந்து பணத்தை பெற்றுக்கொண்டார்.

Kerala Onam Bumper Lottery 2026 Tamil Nadu Man cheated despite winning a 30 crore prize What happened

தமிழகத்தை சேர்ந்த சாதிக் புகார்

தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கூறி வரி பிடித்தம் போக மீதி பரிசுத்தொகையை ரகசியமாக வாங்கிவிட்டு சென்றுவிட்டார். 10 நாட்களுக்கு மேலாக கேரள லாட்டரி பிரியர்கள், ஓணம் பம்பர் அதிர்ஷ்டசாலியை தேடி வந்த நிலையில் நேற்று இவர் ரகசியமாக பரிசுத்தொகையை பெற்று சென்றார். அப்போது அவர் கூறுகையில், "ஊடக வெளிச்சம் அதிகம் இருந்ததாலும், டிக்கெட்டை கொடுத்து பரிசுத்தொகை பெற ஒரு மாத கால அவகாசம் இருப்பதாலும் பொறுமையாக வந்து வாங்கினேன்" என்றார்.

இந்த நிலையில் கேரள ஓணம் பம்பர் லாட்டரி வின்னரில் திடீர் ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சாதிக் என்பவர் நான் வாங்கிய டிக்கெட்டுக்கு தான் முதல் பரிசு ரூ.30 கோடி அடித்துள்ளதாகவும், அந்த டிக்கெட் தொலைந்துவிட்டதாகவும் கூறி கேரள எஸ்பி அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து புகார் கொடுத்துள்ளார். தான் பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட்டை வாங்கியதாகவும், வீடு, ஆபிஸ் என எங்கு தேடியும் டிக்கெட் புகார் கொடுத்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் வாங்கினேன்

நான் தான் வெற்றியாளர் என கேரளாவை சேர்ந்த நபர் ரகசியமாக வந்து பணத்தை பெற்று சென்ற நிலையில் தமிழகத்தை சேர்ந்த சாதிக் தனக்கு பரிசு அடித்ததாகவும், டிக்கெட் தொலைந்ததாகவும் கூறியது கேரளா லாட்டரி பிரியர்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்த சாதிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சாதிக் கூறியதாவது:-

"என்னுடைய டிக்கெட் மிஸ் ஆகிட்டு.. பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் வாங்கினேன்.. இப்போ டிக்கெட் காணவில்லை என்பதால் புகார் கொடுக்க வந்தேன். ரிசல்ட் பார்த்த பிறகு தான் நான் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு அடித்தது தெரியவந்தது. அதாவது கடந்த 27 ஆம் தேதி குலுக்கல் ரிசல்ட் பார்த்தோம். அப்போது தான் நான் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசு அடித்து இருந்தது.

வீடு, அலுவலகத்தில் தேடியும் கிடைக்கவில்லை

இதையடுத்து டிக்கெட்டை தேடிப்பார்த்த போது காணவில்லை. வீடு முழுக்க தேடினோம். என் மனைவி உள்பட பலரும் தேடினோம், கிடைக்கவில்லை. நான் பணிபுரியும் ஆபிசிலும், நான் எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் தேடினேன். எல்லா பக்கமும் தேடிப் பார்த்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதையடுத்து தான் இங்கு டிக்கெட் காணாமல் போனதாக புகார் கொடுக்க வந்தேன். டிக்கெட் தொலைந்தால் பரிசு கிடைக்காது என்பது தெரியவில்லை. பக்கத்தில் இருப்பவர்கள் சொல்லியதன் பேரில் இங்கு புகார் கொடுக்க வந்துள்ளோம்" என்றார்.

சாதிக் புகார் அளித்த நிலையில், யாருக்கு தான் உண்மையில் பரிசு அடித்தது என லாட்டரி பிரியர்களும் குழம்பி போயுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சாதிக் கொடுத்த புகார் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். அதே நேரம் சாதிக் எப்போது டிக்கெட் வாங்கினார், எங்கு டிக்கெட் வாங்கினார்? போன்ற விவரங்கள் கேட்கப்படும். அது உண்மை என்றால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும். இல்லையெனில் சாதிக்கின் கோரிக்கை நிராகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

முதல் பரிசு ரூ.30 கோடி

கேரள ஓணம் பம்பர் ரூ.30 கோடிக்கான குலுக்கல் கடந்த மாதம் 26 ஆம் தேதி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ரூ.30 கோடி TL 360615 என்ற எண்ணிற்கு விழுந்தது. பரிசு விழுந்த டிக்கெட் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலிபரம்பாவில் விற்பனை செய்யப்பட்டது.

முதல் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிக்கு ரூ.30 கோடியில் 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக பிடித்தம் செய்யப்பட்டும். சற்றேறக்குறைய சுமார் 16 கோடி அளவுக்கு தான் வங்கி கணக்கில் பரிசுத்தொகை வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+