Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தி புரியல.." புலம்பெயர்ந்தோர் மீது கொடூர தாக்குதல்! கேரளாவில் பயங்கரம்.. ஒருவர் பரிதாபமாக பலி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளிகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதில் ராம் நாராயண் என்ற தொழிலாளி சிகிச்சைப் பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். விபின் என்ற மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்தார். தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே புலம்பெயர்ந்தோர் மீது ஆங்காங்கே தாக்குதல்கள் நடந்து வருகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் 30 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். டிசம்பர் 17 ஆம் தேதி இரவு இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ இப்போது வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Kerala Paradox Deadly attack against two Migrants Heartbreaking Stories from god s own country

கேரளா

பாலக்காட்டில் தாக்கப்பட்ட அந்த நபர் 30 வயது புலம்பெயர் தொழிலாளி விபின் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடன் தகராறு காரணமாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. விபின் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி, சுக்ஷ் மற்றும் கிரிஷா ஆகியோரிடமிருந்து ₹50,000 கடன் வாங்கியுள்ளார். விபின் அசலை திருப்பிக் கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இருப்பினும், விபின் வட்டிப் பணத்தைச் செலுத்தவில்லையாம். இதன் காரணமாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் விபினை ஒரு மின்கம்பத்தில் கட்டிவைத்துள்ளனர். பொதுவெளியில் வைத்து உருட்டுக் கட்டையைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அவரது மூக்கு, வாய், காதுகளில் இருந்து அதிக ரத்தம் வழிந்தது. இதனால் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயங்கள் மோசமாக இருக்கும் சூழலில், தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

பகீர் சம்பவம்

போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சுக்ஷ் மற்றும் கிரிஷா ஆகியோர் அப்பகுதியில், ஏழைகளுக்கு அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பது, மிரட்டிப் பணம் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

இந்த தாக்குதல் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கொலை முயற்சி மற்றும் ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டு இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு

இதில் தொடக்கத்தில் காயமடைந்த விபின் போலீசில் புகாரளிக்கவில்லை. இருப்பினும், தாக்குதலை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகே போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுடன், விபினை முறைப்படியான புகார் அளிக்கச் சம்மதிக்க வைத்தது. தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகள், ஒரு கைவிடப்பட்ட வீட்டில் மறைந்திருந்தபோது பிடிக்கப்பட்டனர்.

கொடூர தாக்குதல்

விபினுக்கு இந்த கொடூரம் நேர்ந்த அதே டிசம்பர் 17ம் தேதி அதே பாலக்காட்டில் மற்றொரு வடமாநில இளைஞருக்கும் மோசமான சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கரில் இருந்து வேலை தேடி வந்த 31 வயதான ராம் நாராயண் பகேல் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதே பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பள்ளம் கிராமத்தில் திருடன் என நினைத்து ராம நாராயணனை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதில் தான் நிரபராதி என்று ராம நாராயண் இந்தியில் கதறி அழும் நிலையில், அதைக் கண்டு கொள்ளாமல் அந்தக் கும்பல் அவரை தாக்குகிறது. மொழி புரியாததே இந்த தாக்குதலுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

மொழி பிரச்சினை

இது தொடர்பாக உயிரிழந்த ராம் நாராயணின் கான்டிராக்டர் சசிகாந்த் பகேல் கூறுகையில், "மொழிப் புரிதல் இல்லாமல் போய் இருக்கிறது. ராம் நாராயண் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை. இதுவே குழப்பத்திற்குக் காரணம். அவர் சொல்வது புரியவில்லை என்றால் போலீசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். கொல்ல வேண்டிய அவசியம் என்ன? இப்போது, ராம் நாராயணின் நோய்வாய்ப்பட்ட தாய் மகனில்லாமல் தவிக்கிறார். அவரது மனைவி, இரண்டு மகன்கள் அநாதைகளாகிவிட்டனர்" என்றார்.

ராம் நாராயண் கேரளாவுக்கு வந்த ஐந்து நாட்களே ஆகியிருந்தது. அவர் கான்டிராக்டர் சசிகாந்த் வீட்டைத் தேடிப் பல மணி நேரம் அலைந்துள்ளார். மதியம் 2 மணியளவில் சில வீடுகளின் கதவுகளைத் தட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருக்கு யாரும் உதவவில்லை. மாறாக அவர் ஒரு பங்களாதேஷி என்றும் திருடன் என்றும் சொல்லி அவரை அங்கிருந்த கும்பல் தாக்கத் தொடங்கியுள்ளது. தேசியவாதம் மற்றும் மதத்தின் பெயரால் சில நபர்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் கொள்வதை அனுமதிக்க முடியாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+