திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஜெஸ்ஸி".. வாயை திறந்தா பார்த்துட்டே இருக்கலாம்.. ஆனால் பார்ட்டி?.. இப்படி பகீர் குண்டை போட்டுட்டாரே

போலி பெண் வக்கீலை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அப்படியே அச்சு அசல் வக்கீல் மாதிரியே இருக்கிறார் ஜெஸ்ஸி.. கருப்பு கலர் கோட்டை போட்டுக்கிட்டு, கோர்ட்டில் வந்து 2 வருஷம் ஜெஸ்ஸி செய்த வாதங்களை கேட்டு நீதிபதிகளே ஆச்சரியப்பட்டுள்ளனர்.. ஆனால், ஜெஸ்ஸி ஒரு ஃபிராடு...!

கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்ஸி சேவியர்... இவர் சட்டப்படிப்பு படிக்கவே இல்லையாம்.. ஆனால் 2 வருடங்களாக கோர்ட்டில் வாதாடி வந்துள்ளார்... பார் கவுன்சிலிலும் இவர் தன்னுடைய பெயரை வக்கீலாகவே பதிவு செய்துள்ளார்.
இதற்கு பிறகுதான் பக்காவாக மூளையை உபயோகித்துள்ளார் ஜெஸ்ஸி.. தன் மீது எந்த சந்தேகமும் வராமல் இருப்பதற்காக முதலில் ஒரு சீனியர் அட்வகேட்டிடம் ஜூனியராக வேலைக்கு சேர்ந்துள்ளார்... சட்டக்கல்லூரியில் கடைசி வருடம் படிக்கும் மாணவி என்று சொல்லி இண்டர்ன்ஷிப் செய்துள்ளார்.

கேரளா: பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 22பேர் குற்றவாளிகள்- 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் கேரளா: பாஜகவின் ரூ3.5 கோடி ஹவாலா பணம் கொள்ளை- 22பேர் குற்றவாளிகள்- 625 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

உறுப்பினர்

உறுப்பினர்

இதைவைத்தே பார்கவுன்சிலிலும் ரிஜிஸ்தர் செய்துள்ளார் ஜெஸ்ஸி... 2019-ல் உறுப்பினராகி உள்ளார்.. அதற்குபிறகுதான் கோர்ட்டுக்குள் தைரியமாக கால் வைத்துள்ளார்.. பல கேஸ்களில் வாதாட ஆரம்பித்தார்.. இதைவிட ஆச்சரியம் பார் கவுன்சில் தேர்தலில் இவர் போட்டியிட்டார்.. வெற்றியும் பெற்றார்.. லைப்ரரியனாக பதவியிலும் உட்கார்ந்தார்.

நூலகம்

நூலகம்

அங்கே வேலைக்கு போனதுமே தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஜெஸ்ஸி.. நூலகத்தில் இருந்து பல முக்கியமான டாக்குமெண்ட்களை எடுத்துள்ளார்.. இது சம்பந்தமான குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது.. தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம், திருவனந்தபுரத்தில் படிப்பை தொடர முடியாததால், பெங்களூரில் படிப்பை முடித்ததாக அப்பட்டமாக புளுகி உள்ளார்.

லெட்டர்

லெட்டர்

இப்படிப்பட்ட சூழலில்தான் ஜூலை 15-ம் தேதி பார் கவுன்சிலுக்கு ஒரு லெட்டர் வந்தது.. அது ஒரு மொட்டை கடுதாசி.. அதில்தான் ஜெஸ்ஸி பற்றின விஷயம் இருந்தது.. ஜெஸ்ஸி வக்கீலுக்கு படிக்கவே இல்லை என்றும், அவர் ஒரு டுபாக்கூர் வக்கீல் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது... இதனால் அதிர்ந்து போன பார் கவுன்சில் விசாரணையை மேற்கொண்டது.. ஜெஸ்ஸியின் குட்டு வெட்ட வெளிச்சமானது.

சம்மன்

சம்மன்

யாரோ ஒருத்தர் திருவனந்தபுரத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.. அவருடைய நம்பரை கொண்டு வந்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.. இறுதியில் பார் கவுன்சில் ஜெஸ்ஸிக்கு சம்மன் அனுப்பியது... ஆனால் ஜெஸ்ஸி ஒரு பதிலும் சொல்லவில்லை.. போலீசில் புகார் தரப்புட்டுள்ளது.. இப்போது ஜெஸ்ஸி எஸ்கேப்.

தலைமறைவு

தலைமறைவு

முன்ஜாமீன் கோரி கேரள ஹைகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.. குடும்ப வறுமை காரணமாக சட்டம் படிக்க முடியவில்லை... கோர்ட்டில் கவுன் அணியாமல் பிராக்டிசில் ஈடுபட்டதாகவும். குற்றம் புரியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.. ஆனாலும் ஜெஸ்ஸி எங்கே என்று தெரியவில்லை.. தேடி கொண்டிருக்கிறார்கள்..!

English summary
Kerala Police is looking for a woman named Jessi who worked as an Advocate without studying Law
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X