Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்யூட் காக்கி..! கடத்தலில் மீட்கப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காத்த கேரள பெண் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கோழிக்கோடு பகுதியில் குடும்ப தகராறு காரணமாக பிறந்து 12 நாட்கள் ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. போலீஸரார் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் ஆபத்தான நிலையில் மீட்டப்பட்ட குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தையை உயிர் பிழைக்க செய்துள்ளார் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ரம்யா.

காவல்துறை அதிகாரியின் இந்த பணி நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் ரம்யாவை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று(அக்.31) ரம்யாவை நேரில் அழைத்த டிஜிபி அனில்காந்த் கௌரவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

கடத்தல்

கடத்தல்

காவல்துறையினர் என்றாலே அதிகார தோரணையும், மிரட்டல் தொனியும் என்றே அறியப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் காவல்துறையிலும் ஆங்காங்கே சில மனித நேயர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. வழக்கமான புகாரை போல கடந்த 23ம் தேதி கோழிக்கோடு சேவாயூர் காவல்நிலையத்திற்கு ஒரு புகார் வந்திருக்கிறது. அதில், குடும்ப தகராறு காரணமாக கணவனும் மாமியாரும் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீட்பு பணி

மீட்பு பணி

இதனையடுத்து குழந்தையை மீட்க காவல்துறை தனிப்படை ஒன்றை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால் காவல்துறையினருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதாவது கணவன் குழந்தையுடன் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறை இதனை நம்பவில்லை. எனவே தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. தேடுதலில் குழந்தையுடன் கணவன் சேவாயூரிலிருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள பத்தேரியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

பின்னர் அங்கு சென்று காவல்துறையினர் குழந்தையை மீட்டுள்ளனர். ஆனால் குழந்தை மிகவும் சோர்வாக இருந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், சர்க்கரை குறைவாக உள்ளதால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறியுள்ளனர். அப்போது மீட்பு ஆப்ரேஷனில் இருந்த காவல்துறை அதிகாரி ரம்யா, தான் தாய்பாலுட்டும் பெண் என்று கூறி குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

நீதிபதி பாராட்டு

நீதிபதி பாராட்டு

இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து குழந்தையின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பின்னர் சில மணி நேரங்களில் தாயுடன் சேய் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் குழந்தையின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றியதற்காக காவல் அதிகாரி ரம்யாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இது தொடர்பாக ரம்யாவை பாராட்டியுள்ள அம்மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன், "பசியால் வாடிய சிசுவின் உயிரைக் காப்பாற்றிய பணியை பாராட்டுவதாக" கூறினார்.

பாராட்டு

பாராட்டு

மேலும், நீதிபதியிடமிருந்து பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினரை இன்று நேரில் அழைத்த டிஜிபி அனில்காந்த் பாராட்டு தெரிவித்து ரம்யாவை கௌரவித்து சான்றிதழையும் வழங்கியுள்ளார். மேலும் ரம்யா காவல்துறையின் முகமாக மாறியுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். குற்றவாளியை கைது செய்ய போன இடத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றிய காவல்துறை அதிகாரி ரம்யாவின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+