Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கேரளாவில் கனமழை தாக்கம் இருந்து கொண்டே இருந்தது. தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருந்தது.
இதனால் கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.. குறிப்பாக, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்கள் கனமழையின் பிடியில் சிக்கின.

நடவடிக்கை
இந்த 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட்டும் அப்போது விடுக்கப்பட்டது.. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், கேரள மாநிலத்தில் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டினர்.. மலப்புரம், ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம், கண்ணூர், கொல்லம் மாவட்டங்களுக்கு மீட்புக்குழுக்கள் அனுப்பப்பட்டு துரித நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

எச்சரிக்கை
கடந்த அக்டோபர் 7 முதல் 13 ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 166% அதிகமாக மழை பொழிவு கேரளாவில் பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. இந்நிலையில், கேரளாவில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. வடகிழக்கு பருவ மழை காரணமாக கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம், விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்
தற்போது கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 5 மாட்டங்களுக்கு நாளைய தினம் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை உள்ளதால், மீட்பு படையினரும், அம்மாநில அரசும் தயார் நிலையில் உள்ளனர்.

இடுக்கி
மேலும், தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது.. இதனால் இன்று, அல்லது நாளை இடுக்கி அணையில் இருந்து நீர் திறந்து விடப்படலாம் என தெரிகிறது.. அதற்காக இடுக்கி அணை கரையோரப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது... இதற்கான பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டு வருகிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications