"இதாம்லே லவ்வு".. திருமண நாளில் விபத்தில் சிக்கிய மணப்பெண்.. மருத்துவமனையில் மணமகன் நெகிழ்ச்சி செயல்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம், ஆலப்புழாவில் திருமணம் நடைபெற இருந்த நாளில் கார் மரத்தில் மோதி மணப்பெண் விபத்தில் சிக்கினார். இதில், மணப்பெண்ணுக்கு முதுகுத் தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திருமணத்தை நிறுத்தாமல் மருத்துவமனையில் வைத்தே மணப்பெண்ணுக்கு தாலி கட்டி மணமகன் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழாவின் கொம்மடியைச் சேர்ந்தவர் அவனி என்ற இளம்பெண். தம்போலியைச் சேர்ந்தவர் வி.எம்.ஷரோன். இவர்கள் இருவருக்கும் நேற்று நண்பகல் தம்போலியில் திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்காக மணப்பெண் அலங்காரம் செய்ய அவனி தனது தந்தையுடன், குமரகோமுக்கு அதிகாலையில் காரில் சென்றுள்ளார்.

அப்போது, சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மணப்பெண் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். மணப்பெண் அவனிக்கு முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்த நிலையில், மணமகன் ஷரோனும், அவரது குடும்பத்தினரும் உடனடியாக மருத்துவமனைக்குப் புறப்பட்டனர். திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என்று நினைத்த இரு குடும்பத்தினரும் குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் திருமணம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர். திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை அதிகாரிகளே செய்துள்ளனர். பின்னர், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், உறவினர்கள் முன்னிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவனிக்கு மணமகன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.
அவனிக்கு முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருமண நாளில் விபத்தில் சிக்கிய மணப்பெண்ணை மருத்துவமனையில் வைத்தே மணமகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications