வயதான மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது.. ஆசிரியை வேறயாம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி
திருவனந்தபுரம்: கொடூரமாக தாக்கி மாமியாரை மருமகள் சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நடுவிலக்கரா என்ற இடம் உள்ளது. இங்குள்ள ஒரு பகுதியில் தனது குடும்பத்தினருடன் மஞ்சும்மோள் தாமஸ் (வயது 37) என்பவர் வசித்து வருகிறார். ஆசிரியரான இவருடன் கணவனின் தாயார் அதாவது மாமியாரும் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை வீட்டின் ஒரு அறையில் தனது 2 குழந்தைகளுடன் சோபாவில் மஞ்சும்மோள் தாமஸ் அமர்ந்து உள்ளார்.

அப்போது மற்றொரு அறையில் இருந்து மாமியார் எலியம்மா வர்கீஸ் வந்தார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த மஞ்சும்மோள் தாமஸ், மாமியார் என்றும் பாராமல் ஆவேசமாக திட்டி தாக்குகிறார். வயதான மாமியாரிடம் இப்படி கொடூரமாக மருமகள் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மருமகள் கைது: இந்த வீடியோவை பார்த்த பலரும் இரக்கமற்ற மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமர்சித்தனர். இதற்கிடையே, மருமகள் தாக்கியதால் காயம் அடைந்த எலியம்மா வர்க்கீஸ் அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை சென்றார். பின்னர் தனக்கு நடைபெற்ற கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
Abuse of elderly is increasing so much in society. Such treatment is sick to say the least. This woman should be arrested if she hasn't already been. What's really disturbing is how she's training even the child to abuse the old lady. Kindly tag policepic.twitter.com/kWI1ysNrb9
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) December 14, 2023
இந்த நிலையில் போலீசார் மாமியாரை தாக்கிய மருமகள் மஞ்சும்மோள் தாமசை அதிரடியாக கைது செய்தனர். மஞ்சும்மோள் மீது மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பரமாமரிப்பு சட்டம் பிரிவு ஐபிசி 308- கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது மாமியாரை அண்மைக்காலமாகவே தொடர்ந்து அடித்து சித்ரவதை செய்து வந்ததாக மஞ்சும்மோள் மீது குற்ற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெட்டிசன்கள் வேதனை: வயதான மாமியார் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து நெட்டிசன்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சமூகத்தில் வயதானவர்களை துன்புறுத்துவது அதிகரித்துவிட்டது.
இதுபோல நடத்துவது ஒரு நோய். இந்த பெண்மணி கைது செய்யப்பட வேண்டும். வயதானவர்களை எப்படி கொடுமைப்படுத்துவது என சிறு குழந்தைக்கும் பயிற்சி கொடுப்பதுதான் உண்மையிலேயே வேதனை அளிப்பதாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளர்.
ஒரே ஒரு வித்தியாசம்: அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கவில்லை. ஏற்கனவே இப்படி நடந்து கொண்டுஇருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவியிருப்பதுதான்" என்று கூறியுள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், "கேமராவை எடுப்பவரை அவர் பார்க்கும் காட்சிகள் மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் உதவி கேட்கிறார்? எவ்வளவு வேதனையானது. அவர்களுக்காக அனைத்தையும் கொடுத்த நபருக்குதான் இந்த கொடூரம் நடக்கிறது" எனக் கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications