கேரளாவில் தெருவோர வியாபாரிக்கு அடித்த 1 கோடி.. விபூதி அடித்த லாட்டரி கடை ஓனர்.. கடைசியில் ட்விஸ்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரியில் முதல் பரிசான ரூ. 1 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு அடித்துள்ளது. ஆனால், லாட்டரி விற்பனை செய்த ஒருவர் அந்த மூதாட்டியிடம் நைசாக பேசி லாட்டரியை வாங்கி சென்று மொத்தமாக ஏமாற்ற முயன்றுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியகம் சந்திப்பு அருகே தெருவோர கடை ஒன்றை நடத்தி வருகிறார் சுகுமாரியம்மா.. துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற சுகுமாரியம்மா.. தற்போது பிழைப்புக்காக தெருவோர கடை நடத்தி வருகிறார்.

ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி: 72 வயதான இவருக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. எவ்வளவு உழைத்தாலும் கிடைக்கும் பணம்.. செலவுக்கே சரியாக உள்ளது. அதிர்ஷ்டமாவது கைகொடுத்தால் போதும்.. சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிடுவேன் என நினைத்த சுகுமாரியம்மா தினமும் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார்.
இந்த நிலையில்தான் கேரளாவின் ஃபிப்டி ஃபிப்டி லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார் சுகுமாரியம்மா.. செட் டிக்கெட்டுகளாக 12 டிக்கெட்டுகளை 1,200 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பல நாள் வாங்கி டிக்கெட் கிடைக்காமல் போனாலும் சுகுமாரியம்மாவிற்கு கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் முதல் பரிசுத்தொகை அடித்துள்ளது.
ஒரு கோடி பரிசு: அவரிடம் இருந்த FG 348822-என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை கிடைத்தது. செட் டிக்கெட் என்பதால் ஆறுதல் பரிசுத்தொகையும் அவருக்கே அடித்தது. ஆனால் லாட்டரி ரிசல்ட் எதுவும் பார்க்க தெரியாத அந்த மூதாட்டிக்கு இந்த விஷயம் தெரியவில்லை.. இதற்கிடையே, சுகுமாரியம்மாவிடம் லாட்டரி டிக்கெட்டை விற்ற கண்னன் என்ற லாட்டரி விற்பனையாளர்.. உங்கள் டிக்கெட்டிற்கு 500 ரூபாய் பரிசு அடித்துள்ளதாக மொத்த டிக்கெட்டையும் வாங்கி சென்றுள்ளார்.
ஏமாற்றி சென்ற கடை ஓனர்: சிறிது நேரத்தில் திரும்பி வந்து தவறாக சொல்லிவிட்டேன்... பரிசு எதுவும் விழவில்லை என்றும் ரூ.100 கொடுத்துவிட்டு சென்றுள்ளார். முதல் பரிசு தொகை கிடைத்த லாட்டரியுடன் சென்ற தனது ஊருக்கு சென்ற கண்ணன் ரூ.1 கோடி விழுந்து விட்டதாக கூறி லட்டு கொடுத்து கொண்டாடியிருக்கிறார்.. அப்போது கண்ணன், லாட்டரி விற்பனை செய்யும் பாளையம் பகுதியில் லாட்டரி கடை வைத்து இருக்கும் ராதாகிருஷ்ணன் என்பவர் தனது நண்பரும் லாட்டரி கடை வைத்திருப்பவருமான பிரபா என்பவரிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தலைமறைவான கண்ணன்: பிரபாவிற்கு சுகுமாரியம்மாவை நன்றாக தெரியும். இதனால், சந்தேகம் அடைந்த பிரபா, சுகுமாரியம்மாவிடம் இது குறித்து விசாரித்து இருக்கிறார். அப்போதுதான், சுகுமாரியம்மா ஏமாற்றப்பட்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கிடையில், சுகுமாரியம்மாவிடம் லாட்டரியை ஏமாற்றி வாங்கி சென்ற கண்ணனை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால், தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமைறைவாகிவிட்டார்.
போலீசில் புகார்: இதையடுத்து லாட்டரி துறையிடம் சுகுமாரியம்மா நடந்த விஷயம் குறித்து புகார் அளித்துள்ளார். அதிகாரிகள், காவல்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து சுகுமாரியம்மா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த கண்னனையும் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு: அவரிடம் நடத்திய விசாரணையில் சுகுமாரியம்மாவை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்குபதிவு செய்து கண்ணனை போலீசார் சிறையில் அடைத்தனர். கண்ணனிடம் பறிமுதல் செய்த டிக்கெட்டுகள் 2 நாட்களில் சுகுமாரியம்மாவிடம் ஒப்படைக்கபடும் என்றும் அதன்பிறகு பரிசுத்தொகை வழங்கப்படும் அல்லது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தீர்வை எட்டும் என போலீசார் தெரிவித்தனர்.
பணம் எப்போது கிடைக்கும்: சுகுமாரியம்மாவிற்கு ஏற்கனவே ரூ.30 ஆயிரம், 60 ஆயிரம் என சிறிய அளவிலான பரிசுத்தொகை அடித்துள்ளது. தற்போதுதான் முதல் முறையாக 1 கோடி கிடைத்துள்ளதாம். சொந்தமாக ஒரு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பதுதான் எனது கனவு. எனக்கு விரைவில் பரிசுத்தொகை கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.
-
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications