இன்ஸ்டாவில் அறிமுகம் ஆன கல்லூரி மாணவிகள்.. ஆசை காட்டி காமுகன் செய்த வேலை.. 20 பெண்களூக்கு கொடுமை
திருவனந்தபுரம்: இன்ஸ்டாகிராமில் பழகிய பெண்களை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் 20-க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ் (வயது 38). இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வந்துள்ளார். இன்ஸ்டா முகப்பு பக்கத்திலும் கட்டு மஸ்தான உடல்வாகம் கொண்ட புகைப்படத்தை வைத்துள்ளார்.

கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள்
இன்ஸ்டாவில் அறிமுகம் ஆகுபவர்களிடம் நட்பாக பேசி நண்பர் ஆகிவிடுவார். இப்படியாக கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடமும் இன்ஸ்டா மூலமாக அறிமுகமாகி நட்புடன் பேச்சை தொடங்கியிருக்கிறார். 38 வயது என்றாலும் இவரும் கல்லூரி மாணவர் போல் உள்ள புகைப்படத்தை வைத்திருப்பதால் கல்லூரி மாணவிகள் பலரும் இவரது ஐடியை பாலோ செய்து உள்ளனர்.
இப்படி இவரது இன்ஸ்டா மூலமாக அறிமுகம் ஆனவர்களில் திருமணம் ஆன பெண்களும் அடங்குவார்கள். இதன்பிறகு தனக்கு பிடித்த பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் சாட்டிங் செய்து திருமணம் செய்வதாக கூறி பேசுவாராம். பிறகு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதோடு அதனை செல்போனில் ரெக்கார்டு செய்தும் வைத்து உள்ளார்.
கல்லூரி மாணவிகள் புகார்
பின்னர் அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக சொல்லி மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட திருச்சூரை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 3 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை வைத்து யது கிரிஷை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் இவர் இதே பாணியில் பல பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. அவரது இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி பழகிய 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கிரிஷை கைது செய்தனர்.
செல்போனில் ஆபாச வீடியோக்கள்
புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றதோடு, மேலும் பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளதால் அவர்களையும் கண்டறிந்து வாக்கு மூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று யது கிரிஷின் செல்போனை ஆய்வு செய்ததில் பல பெண்களின் புகைப்படம் மற்றும் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவற்றை தொழில்நுட்ட ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
20-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications