திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குரங்கு அம்மை உயிரை கொல்லுமா? கேரள இளைஞருக்கு என்னாச்சு? அறிகுறி இருந்த நிலையில் அதிர்ச்சிகர மரணம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது கேரளாவில் 3, டெல்லி மற்றும் ஆந்திராவில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து6 பேர் இறந்த அதே இடம்.. ரயில்போல் பின்னிய 15 வாகனங்கள்! செங்கல்பட்டு அருகே சினிமாவை மிஞ்சும் விபத்து

வழிகாட்டு நெறிகள்

வழிகாட்டு நெறிகள்

கேரளாவில் முதலில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டதை தொடர்ந்து குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. அதில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்." என அறிவுறுத்தப்பட்டது.

டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு

டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு

டெல்லியில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட 31 வயது இளைஞருக்கு வெளிநாட்டு தொடர்புகள் இல்லாதது மர்மமாக இருந்து வந்தது. அவருடன் தொடர்பில் இருந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட நபருக்கு இதுவரை எந்தவிதமாக அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக காய்ச்சல், தோல் பிரச்சனை, தடிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒருவர் பலி

ஒருவர் பலி

இந்த நிலையில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததால் அவர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இதற்கிடையே அவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்து இருக்கிறார்.

Recommended Video

    Monkey Pox எப்படி பரவும்? *Health
    விசாரணைக்கு உத்தரவு

    விசாரணைக்கு உத்தரவு

    இதுகுறித்து பேசிய அவர், "வெளிநாட்டில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாஸிட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. சோர்வு மற்றும் மூளை அழற்சி காரணாமாகவே அவர் திருச்சூரில் சிகிச்சை பெற்று இருக்கிறார். குரங்கு அம்மை என்பது உயிர் பறிக்கும் நோய் கிடையாது. சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதா என்று விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளோம். உயிரிழந்த இளைஞருக்கு தொடர்புடையவர்கள் விபரம், அவர் பயணித்த இடங்களில் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்." என்றார்.

    English summary
    Man died in Kerala with Monkey Pox symptoms shocked the state health officials: குரங்கு அம்மை நோய் அறிகுறிகளுடன் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X