சேட்டன்களுக்கு தலைவலி.. தோழியுடன் பைக்கில் சென்றவரை மனைவியிடம் காட்டிக் கொடுத்த புதிய டிராபிக் கேமரா
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் நகரப்பகுதிகளில் முக்கிய சாலைகளில் நிறுவப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் சாலை விதிகளை மீறும் நபர்களை கண்டறிந்து செல்போன் எண்ணுக்கு மேசேஜ் அனுப்பி அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஏஐ கேமராக்களால் வேறு விதமான பிரச்சினைகளையும் கேரள வாகன ஓட்டிகள் எதிர்கொண்டுள்ளனர்.
கேரளாவில் ஸ்கூட்டரில் வேறு ஒரு பெண்னுடன் பயணித்த நபரை, அவருடைய மனைவியிடம் பிடித்து கொடுத்து இருக்கிறது இந்த நடைமுறை. குடும்பத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணிவிட்ட இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

சாலை விதி மீறும் வாகன ஓட்டிகளை இனி போலீசார் மறித்து அபராதம் போட மாட்டார்கள் என்றும் விதி மீறும் பயணிகள் இந்த கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு செல்போனுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்தது.
இதனால், ஹெல்மட் அணியாமல் பயணிப்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள், வெள்ளைக் கோட்டை தாண்டி நிற்பவர்கள் என ஒரு விதி மீறலும் பயணிகள் ஈடுபட்டாலும் நேரடியாக ஏஐ கேமரா காட்டி கொடுத்து விடும் என்று போலீசார் தெரிவித்ததால் வாகன ஓட்டிகள் திகில் அடைந்தனர். அரசியல் ரீதியாகவும் கர்நாடக அரசுக்கு பெரும் நெருக்கடியை இந்த ஏஐ கேமரா விவகாரம் கொடுத்துள்ளது.
கேரளாவில் ஆளும் இடது சாரி அரசாங்கம் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள இந்த செயற்கை நுன்னறிவு கேமராக்களால் அரசுக்கு தான் தலைவலி என்றாலும் வாகன ஓட்டிகளுக்கு வேறு விதமான பிரச்சினை எழத் தொடங்கியிருப்பதாக சொல்கிறார்கள் சேட்டன்கள்..
கேரளாவில் ஸ்கூட்டரில் வேறு ஒரு பெண்னுடன் பயணித்த நபரை, அவருடைய மனைவியிடம் பிடித்து கொடுத்து இருக்கிறது இந்த நடைமுறை. குடும்பத்தில் குழப்பத்தையே உண்டு பண்ணிவிட்ட இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 32-வயது நபர் ஒருவர் அங்குள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வருகிரார். திருமணம் ஆகி 3 வயதில் ஒரு குழந்தையும் அவருக்கு உள்ளது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி இவர் தனது மனைவியின் பெயரில் இருக்கும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெளியில் சென்று கொண்டிருக்கிறார். வீட்டில் தனியாக செல்கிறேன் என்று சொல்லிவிட்டு தனது பெண் தோழியையும் அழைத்து சென்று இருக்கிறார் அந்த நபர்.
ஹெல்மெட் அணியாமல் அவர் சென்றதால் புதிய ஏஐ கேமரா அவரை படம் பிடித்து விட்டது. வாகனத்தின் எண்ணை வைத்து அதன் உரிமையாளராக இருக்கும் அந்த நபரின் மனைவிக்கு மெசேஜ்ஜில் விதி மீறல் குறித்து தகவல் போயிருகிகிறது. அத்துடன் விதி மீறியதற்கான ஆதாரமாக புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இதைப் பார்த்ததும் கொதித்து போன மனைவி, பெண் தோழியுடன் சுற்றி விட்டு வந்த கணவரை பிடித்து, வண்டியில் பின்னால் அமர்ந்து இருக்கும் இந்த பெண் யார் என்று விசாரித்து வருகிறார். அந்த நபரே, லிப்ட் கேட்டார் என்பதற்காக அவரை வண்டியில் ஏற்றி சென்றேன்.. அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனைவியிடம் மன்றாடியிருக்கிறார். ஆனால் இந்த கதையெல்லாம் என்கிட்ட வேணாம் என்று கணவருக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து விட்டார்.
தன்னையும் தனது குழந்தையையும் தாக்கியதாக அந்தபெண் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 32-வயது நபரை கைது செய்த போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கேரளா அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழில் நுட்பத்தால், வீட்டிலும் மாட்டிக்கொள்ள வேண்டியிருப்பதாக பலரும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக வாகனத்தை ஒட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications