ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே
திருவனந்தபுரம்: கேரளாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், மனோரமா நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தல் சர்வே இப்போது வெளியாகியுள்ளது. அதில் இந்த முறை காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும் கணிசமான இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு உள்ள சூழலில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள சூழலில், மனோரமா நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய தேர்தல் சர்வே இப்போது வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் வெற்றி
இந்த சர்வேயின்படி கேரளாவில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மொத்தம் 140 தொகுதிகள் உள்ள சூழலில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 71 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் 69-81 இடங்களைப் பெறும் என மனோரமா சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் கடந்த 10 ஆண்டுகளாகக் கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள இடதுசாரிகள் 57-69 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியும் 1 முதல் 5 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி இப்போது தான் கேரளாவில் இறங்கி பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் தரும் வகையில் இந்த சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
பிராந்தியம் வாரியாக
பிராந்தியம் வாரியாக பார்க்கும்போது, தென் கேரளாவில்.. தலைநகர் திருவனந்தபுரத்தில், நெமோம், கழக்கூட்டம் தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நெமோமில், முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் கழக்கூட்டத்திலும் வெல்லக்கூடும் என கூறப்பட்டுள்ளது. அங்குக் கடுமையான மும்முனைப் போட்டி நிலவும் சூழலில் அது பாஜகவுக்கு சத்தகமாகச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ள சூழலில் இடதுசாரிகளின் எல்டிஎஃப் 8-10, காங்கிரஸின் யுடிஎஃப் 2-4, பாஜகவின் என்டிஏ 1-3 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஆலப்புழாவில் எல்டிஎஃப் 6-8 இடங்களுடன் ஆதிக்கம் செலுத்த, யுடிஎஃப் 1-3 இடங்களை வெல்லும். என்டிஏவுக்கு இங்கு இடமில்லை. பத்தனம்திட்டா மாவட்டத்தில் யுடிஎஃப் 3-5 இடங்களிலும், எல்டிஎஃப் 0-2 இடங்களிலும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லத்தில் இடதுசாரிகள் 5-7, காங்கிரஸ் 4-6 இடங்களைப் பெறும்.
வடக்கு கேரளா
காசர்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளை உள்ளடக்கிய வட கேரளாவின் மலபார் மண்டலத்தில் தான் காங்கிரஸின் செல்வாக்கு அதிகமாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் மொத்தம் 48 தொகுதிகள் உள்ள சூழலில், காங்கிரஸ் கூட்டணிக்கு 25 முதல் 34 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இடதுசாரிகள் கூட்டணி 14-23 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கேரளாவில் இடதுசாரிகள் ஓரளவுக்கு முன்னிலையில் உள்ளது. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கும் இங்குக் கணிசமான ஆதரவு இருக்கிறது.
இறுதிக் கட்ட பிரச்சாரம்
அதாவது தெற்கு கேரளாவிலும், மத்திய கேரளாவிலும் இடதுசாரிகளுக்கு ஓரளவுக்குச் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. ஆனால், வடக்கு கேரளாவில் கிட்டத்தட்டக் காங்கிரஸ் அலை என்ற சூழல் உள்ளதாலும் மற்ற பிராந்தியங்களில் கணிசமான இடங்களில் வெல்ல முடிவதாலும் இந்த முறை கேரளா காங்கிரஸ் வசமாகும். அதேநேரம் மிகக் குறைவான நம்பரிலேயே சீட் வித்தியாசம் இருப்பதால் கடைசிக்கட்ட பிரச்சாரத்தைப் பொறுத்தே நிலைமை மாறும்!












Click it and Unblock the Notifications