அதிர்ச்சியில் கேரளா: நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் தீவிர கண்காணிப்பில்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள்.
கேரளாவில் கொரோனா கால அச்சம் தற்போது நிபா வைரஸ் தொற்றால் உருவாகி உள்ளது. கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் 24 வயது இளைஞர் ஒருவர் மரணம் அடைந்தார். இதனையடுத்து கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் உடனடி பொது சுகாதார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேரளா அரசுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தியது. அதாவது நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம், சுற்றுப்புறங்களில் ஆய்வு மேற்கொள்ளுதல், கடுமையாக தனிமைப்படுத்துதல் மற்றும் சந்தேக நபர்களை தனிமைப்படுத்துதல். ஆய்வகப் பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் கூட்டு நோய்ப்பரவல் கட்டுப்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த 175 பேரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 74 பேர் சுகாதாரத்துறை பணியாளர்கள் என்று கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த 175 பேரில் 13 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்த 13 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போது மலப்புரம் மாவட்டத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளாவில் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கர்நாடகா அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கேரளாவில் 2021, 2023-ம்ஆண்டுகளில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக பழ வெளவால்கள் வைரஸின் ஆதாரமாகும். மேலும் தற்செயலாக வௌவால் கடித்த பழங்களை உட்கொள்வதன் மூலம் மனிதர்கள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications