கழிப்பறை இருக்காது! பீரியட்ஸின் போது நாப்கின் கூட மாற்ற முடியாது! ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் புகார்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையில் மலையாள நடிகைகள் எப்படி டாப் நடிகர்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை விவரித்துள்ளது. படப்பிடிப்பின் போது பாலின பாகுபாடும் பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கழிப்பறை வசதிகள் கூட நடிகைகளுக்கு சரி வர கிடைப்பதில்லை என்றும் சம ஊதியமும் கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு மலையாளம், தமிழில் நடித்த நடிகை ஒருவர், நடிகர் திலீப் குமாரால் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேர் கைதாகினர்.

hema committee crime thiruvananthapuram

இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள சினிமாவில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்வதாகவும் அவற்றை முன்னணி நடிகர்கள் சிலரே அரங்கேற்றுவதாகவும் நடிகைகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரை விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு நபர் கமிஷனை கேரள அரசு நியமித்தது.

இந்த நிலையில் அந்த குழுவானது அறிக்கையை கடந்த 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துவிட்டது. ஆனாலும் அதை கேரள அரசு வெளியிடாமல் இருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகும் அதை வெளியிடாதது நடிகர்களை காப்பாற்றும் செயல் என்று விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் தகவல் உரிமை ஆணையம் தலையிட்டு சர்ச்சை விஷயங்களை தவிர்த்து விட்டு பிற விஷயங்களை வெளியிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கை இன்று வெளியாக இருந்த நிலையில் நடிகை ரஞ்சனி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் ஹேமா குழுவிடம் வாக்குமூலம் அளித்த நடிகைகளுக்கு ஒரு பிரதியை அளித்து அவர்களின் சம்மதத்தை பெற்று அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை கேரள உயர்நீதிமன்றம் இன்று பரிசீலனை செய்து தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில் மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. ஷூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம். தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் வரும். கழிப்பறையே இல்லாத நிலையில் எங்கு போவது என்பதால் இப்படி தண்ணீர் குடிப்பதை தவிர்த்து விடுகிறார்களாம்.

அதிலும் குறிப்பாக வெளியூர் படப்பிடிப்புகளின் போது தண்ணீரே குடிக்காமல் இருந்து விடுகிறார்களாம். மிக தொலைவில் உள்ள இடங்களுக்கு சென்றால் உடை மாற்றுவதற்கு கூட தனியறை இருக்காதாம். இதனால் ஏதாவது புதர்களில் மறைந்து ஒரு துணியை திரை போல் போட்டுதான் உடை மாற்றுவார்களாம். அந்த திரையை நடிகைகளின் அசிஸ்டென்ட்டுகளோ பெண் தொழில்நுட்ப கலைஞர்களோ பிடித்துக் கொள்வார்களாம்.

மாதவிடாய் நேரங்களில் பாத்ரூமை பயன்படுத்த முடியாதது பெரும் கஷ்டமாக இருக்குமாம். அது போல் நாப்கினை மாற்றவும் பழைய நாப்கினை டிஸ்போஸ் செய்யவும் இடம் இல்லாமல் தவிப்பார்களாம். ஷூட்டிங்கின் போது தண்ணீரே குடிக்காதது ஒரு பழக்கமாகவே மலையாள சினிமாவில் உள்ளது. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால் ஒரு கட்டத்தில் அதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்களாம். அப்போது எங்காவது மறைவான இடத்தில் போய் கழிக்கும் போது சிறுநீர் தொற்றுகளுக்குள்ளாவார்களாம்.

இந்த பாகுபாடுகள் நடிகைகளுக்கு மட்டுமில்லை, சிகை அலங்கார கலைஞர்கள், திரைக்கு பின்னால் பணியாற்றும் பெண்கள், உதவியாளர்கள், ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் ஆகியோருக்கும்தான். ஒரு முறை ஜூனியர் ஆர்டிஸ்ட் ஒருவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. அதற்கு கழிப்பறைக்குச் செல்ல 10 நிமிடங்கள் ஆகும் என்பதால் அந்த கலைஞரை டாய்லெட்டுக்கு கூட அனுப்பாமல் தயாரிப்பு நிறுவனம் கொடூரம் செய்தது. இதனால் பல பெண் கலைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கேரவனில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த ஹீரோ, ஹீரோக்களுக்கு மட்டும் அனுமதிக்குமாம். மற்ற கலைஞர்கள் அதை பயன்படுத்த அனுமதி கிடையாதாம். இவ்வாறு ஹேமா ஆணைய அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+