கொட்டாவி விட்டதால்.. திடீரென நின்று போன பேச்சு! தவித்த வடமாநில இளைஞருக்கு மருத்துவர் செய்த பேருதவி
திருவனந்தபுரம்: தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்த வடமாநில பயணி ஒருவருக்கு, கொட்டாவி விட்டதால் தாடை எலும்புகள் சிக்கிக்கொண்டன. இதையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் மருத்துவர், பயணிக்கு சிகிச்சை அளித்து பிரச்சனையை சரி செய்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி-திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த வடமாநில பயணி, சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அசதி மிகுதியால் கொட்டாவி விட்டிருக்கிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தாடை எலும்புகள் லாக் ஆகிவிட்டன. அவரால் வாயை மூட முடியவில்லை. எந்த வார்த்தையும் பேச முடியவில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை யாரிடம் சொல்வது என்று புரியாமல் விழித்த அவர், ரயில்வே காவலர்களின் உதவியை நாடியிருக்கிறார்.

இதனையடுத்து அவர்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவர், பயணியின் வாயில் கையை விட்டு லாக் ஆன தாடையை சரி செய்திருக்கிறார். இரண்டு முயற்சிகளுக்கு பின்னரே தாடை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நல்வாய்ப்பாக இறுதியில் தாடைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதால் வடமாநில பயணி, மருத்துவரை கையெடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
🏥 Quick medical aid at Palakkad Junction
— Southern Railway (@GMSRailway) October 18, 2025
A 24-year-old passenger traveling on Train No. 22503 Kanniyakumari – Dibrugarh Vivek Express suffered a Jaw dislocation and received timely medical assistance from Dr. Jithin P.S., DMO/RH Palakkad. The passenger resumed the journey… pic.twitter.com/UY4zvSxwJH
இது ஒரு சாதாரண பிரச்சனைதான். ஆனால் பயந்துவிட்டால் இதனை சரி செய்வது கஷ்டமாகிவிடும். வாயை திறக்கவும், மெல்லவும், கொட்டாவி விடவும் டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் எனப்படும் எலும்பின் செயல்பாடு மிகவும் முக்கியம். இது கீழ் தாடையை மண்டை ஓட்டுடன் இணைத்திருக்கிறது. வழக்கமாக கொட்டாவி விட வாயை அதிகமான அகலத்திற்கு திறப்போம். இப்படி செய்யும்போது, இந்த ஜாயிண்ட்டில் உள்ள ஒரு குருத்தெலும்பு வட்டு விலகி விடுகிறது. இது எப்போதும் நடப்பதில்லை. மிகவும் அரிதாக ஓரிரு நபர்களுக்கு நடக்கிறது.
இந்த வட்டு, கொட்டாவி விடும்போது எலும்பு உராய்வுகளை கட்டுப்படுத்துகிறது. வட்டு நகர்ந்துவிடும்போது தாடை எலும்பு லாக் ஆகி விடுகிறது. இப்படி லாக் ஆகும்போது வாயை மெதுவாக அசைப்பதன் மூலம், தாடைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் பதற்றமடைந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப தாமதமாகலாம். அந்த சமயத்தில் மருத்துவரின் உதவி மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications