கேரளம் என பெயரை மாற்றிய கேரளா! வேற எந்தெந்த மாநிலங்கள்.. இதுவரை பெயரை மாற்றியிருக்காங்க தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இது 'வேணாட்டின்' ஒரு பகுதியாகும். ஆம் கேரளாவுக்கு 'வேணாடு' என்றுதான் பெயர் இருந்தது. அதன் பின்னர் வேணாநாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா உயிரிழந்த நிலையில், நம்பூதிரி-நாயர் கூட்டணி வேணாட்டை கைப்பற்றியது. மட்டுமல்லாது இதற்கான பெயரையும் திருவிதாங்கூர் என்று மாற்றியது. அதன் பின்னர் இவர்களை போலவே மலையாள மொழி பேசும் மற்றொரு பகுதியான கொச்சியும் திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டது.

இதனையடுத்து மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டதால் மலபார் என்றும் அழைக்கப்பட்டது. இப்படி வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்த கேரளா, கடைசியாக கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போதுதான் இம்மாநிலத்திற்கு கேரளா என்கிற பெயர் உருவானது. இது மலையாளத்தில் கேரளம் என்றும், அதே ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கேரளா என்றும் அழைக்கப்பட்டது.
இந்நிலையில்தான் அனைத்து மொழிகளிலும் 'கேரளம்' என்றே அழைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அரசியலமைப்பில் இதற்கான திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்படி மாநிலத்தின் பெயரை மாற்ற கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே பல மாநிலங்களின் பெயர்கள் இப்படி மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழ்நாட்டின் பெயரும் இப்படிதான் மாற்றப்பட்டது. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டின் பெயர் மெட்ராஸ் மாகாணம் என்றே தொடர்ந்தது. இது தமிழ்நாட்டு மக்களிடையே தீராத கனலாய் கனன்று கொண்டிருந்தது. அப்படி இருக்கையில்தான் தியாகி சங்கரலிங்கனார் மெட்ராஸ் எனும் பெயரை தமிழ்நாடு என மாற்ற வேண்டும் என்று கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்த கோரிக்கைக்காக உயிரும் நீத்தார்.
இதற்கிடையில் திமுக ஆட்சிக்கு வந்தபோது இந்த பெயர் மாற்றத்தில் உறுதியாக இருந்தது. 1967ம் ஆண்டு அண்ணா முதலமைச்சராக தேர்வான நிலையில் அதே ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றத்தை தீர்மானமாக கொண்டு வந்தார். இதனையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் மெட்ராஸ் மாகாணம் எனும் பெயர் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.
அதேபோல தமிழ்நாட்டை பின்பற்றிதான் கர்நாடகாவும் தனது பெயரை மாற்றியது. கன்னடம் பேசும் பகுதிகள் அனைத்தும் 1956ம் ஆண்டு மைசூர் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த மாநிலம் உருவாக்கப்பட்டபோதே இதன் பெயரை கர்நாடகம் என மாற்றம் செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் மக்கள் வலியுறுத்தினர். இதற்கான போராட்டங்களும் தீவிரமாக இருந்தன. ஏறத்தாழ அனைத்து கட்சியினருக்கும் மைசூர் என்பது கர்நாடகா என மாற்றப்பட வேண்டும் என்பதில் உடன்பாடு இருந்தது.
இதனையடுத்து கடந்த 1972ம் ஆண்டு ஜூலை மாதம் 25 மற்றும் 27ம் தேதிகளுக்கு இடையில் சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 1973ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பெயர் மாற்றப்பட்டது. கர்நாடக மாநிலம் உருவாகி 17 ஆண்டுகளுக்கு பின்னர்தான் இம்மாநிலத்திற்கு கர்நாடகா என்று பெயர் வந்தது.
அதேபோல மத்தியப் பிரதேச மாநிலமும் 1956ம் ஆண்டு வரை மத்திய பாரத் என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. மத்திய பாரதத்தின் தலைநகர் இரண்டு இடங்களில் இருந்தது. அதாவது குவாலியர் 7 மாதங்கள் தலைநகராகவும், இந்தூர் 5 மாதங்கள் தலைநகராகவும் இருந்தது. இதனையடுத்துதான் 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மத்திய பிரதேசம் உருவாக்கப்பட்டு போபால் அதன் நிரந்தர தலைநகராக உருவானது.
உத்தராகாண்ட் மாநிலமும் இப்படிதான் பெயர் மாற்றம் பெற்றது. கடந்த 2000ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலிருந்து இது பிரிக்கப்பட்டு நாட்டின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. அப்போது இம்மாநிலத்தின் பெயர் உத்ராஞ்சல். இதன் பின்னர் கடந்த 2007ம் ஆண்டுதான் இதன் பெயர் உத்தராகாண்ட் என மாற்றம் செய்யப்பட்டது. ஒடிசாவும் அதன் முந்தைய பெயரான ஒரிசாவிலிருந்து மாறியதுதான். கடந்த 2011ம் ஆண்டுதான் இந்த பெயர் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் பெயரும் மாற்றப்பட்டதுதான். முதலில் இது வடக்கு-கிழக்கு எல்லை ஏஜென்சி என்று அழைக்கப்பட்டது. பின்னர் வட-கிழக்கு எல்லைப் பாதைகள் என்றும் அதிலிருந்து 1972ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசம் என்றும் பெயர் மாற்றம் பெற்றது. தொடக்கத்தில் யூனியன் பிரதேசமாக இருந்த இது பின்னர் 1987ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாநில அந்தஸ்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications