நிமிஷா பிரியா கொலையாளி கிடையாது? வழக்கில் புதிய திருப்பம்! வெளியானது ஆதாரம்!
திருவனந்தபுரம்: ஏமன் நாட்டில் கொலை குற்ற வழக்கில் சிறையில் இருக்கும் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர் குற்றவாளி கிடையாது என்று, மற்றொரு செவிலியர் ஆதாரப்பூர்வமாக மறுத்திருக்கிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் செவிலியர் நிமிஷா பிரியா. அவர் ஏமன் நாட்டில் நீண்ட காலமாக பணியாற்றி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அங்கு சொந்தமாக மருத்துவமனையை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், ஏமன் நாட்டின் குடியுரிமை பெற்றவர் பங்குதாரர்களாக இருந்தால்தான் சொந்தமாக மருத்துவமனை தொடங்க முடியும்.

எனவே 'தாதல் அப்துல் மக்மதி' என்பவரை நிமிஷா வணிக கூட்டாளியாக சேர்த்துக்கொள்கிறார். சில நாட்கள் கழித்து தாதல் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில், கொலை செய்தது நிமிஷாதான் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தாதல் உயிரைப் பறித்தது நிமிஷா பிரியா அல்ல என்று வெளிநாட்டில் வசிக்கும் செவிலியரான கிருபா மேரி கூறியுள்ளார். இத்தாலியில் பணிபுரியும் கேரள செவிலியரான கிருபா, தான் முன்பு நிமிஷாவுடன் இது குறித்து பேசியுள்ளதாகவும், அதன் நேரலை வீடியோ காட்சிகளை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததாகவும் கிருபா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நிமிஷா பிரியாவுடன் நான் மிகவும் நெருங்கிய பழக்கம் கொண்டவள். முன்பு 'விங்ஸ் கேரளா' என்ற அமைப்பு மூலம் நிமிஷாவுடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நிமிஷா பல விஷயங்களைச் சொன்னார். அந்த நேரலை வீடியோவை நான் பகிர்ந்திருந்தேன்.
நிமிஷா பிரியா ஏமனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு கிளினிக்கை தொடங்கலாம், எனக்கும் பங்கு வேண்டும் என்று கூறி தாதல் அவரை அணுகினார். அதேபோல மருத்துவமனை உரிமையாளரும், தாதல் என்பவரும் நிமிஷா பிரியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்யலாம் என்று கூறினார். 34 லட்சம் ரூபாய் கொடுத்தால், 3:3:3 விகிதத்தில் பங்கு பெறலாம் என்றும் கூறியிருக்கிறார்கள். அவள் அதற்குத் தயாராக இருந்தாள். அப்படியாக, நிமிஷா பிரியாவுக்கு அவரது கணவர் டோமி 34 லட்சம் ரூபாய் கொடுத்தார்.
ஆனால், ஒப்பந்தம் செய்தபோது, இரண்டு பங்குகளை அவளது பெயரில் வைத்து மோசடி செய்தனர். அதிலெல்லாம் அவளுக்கு சந்தேகம் இருந்தது. தாதல் அவளை மிகவும் துன்புறுத்தினான். திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினான், சொத்தை அபகரிக்கவே அப்படிச் செய்தான். பின்னர் அவளது பாஸ்போர்ட்டையும் வாங்கிக்கொண்டான். அங்கே இந்தியத் தூதரகம் இல்லாததால், அவளுக்கு உதவி தேடுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போயின.
இவர்கள் மருத்துவமனையில் ஹனான் என்ற ஒரு தோழி இருந்தார். மட்டுமல்லாது செக்யூரிட்டிக்கு ஒருவர் இருந்தார். தனக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து செக்யூரிட்டியிடம் நிமிஷா விளக்கியுள்ளார். அதற்கு அந்தக் செக்யூரிட்டி, 'தாதலை மயக்கமடையச் செய்தால், நான் அவனை சாக்கில் வைத்து எடுத்துச் சென்று போட்டுவிடுகிறேன்' என்று கூறியுள்ளார்.
இதன்படி, தாதல் கிளினிக்கிற்கு வந்தபோது, நிமிஷா இன்ஜெக்ஷன் கொடுத்தார். முதலில் கொடுத்தபோது வேலை செய்யவில்லை. இரண்டாவது முறை கொடுத்தபோது, அவன் மரண வேதனையுடன் துடித்தான். அப்போது அவள் பயந்துபோய், உடனடியாக இரண்டு முறை அல்பிராக்ஸ் மாத்திரைகளை உட்கொண்டாள். இதனால், மருந்துகளின் தாக்கத்தால் என்ன நடக்கிறது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அப்படியாக ஹனானை அழைத்தபோது, ஹனான் 'நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார். 'தாதலுக்கு இரத்த அழுத்தம் (BP) இருந்தது' என்று நிமிஷா சொன்னார். இரத்த அழுத்தம் உள்ள ஒருவரை நிமிஷா எப்படி கொல்வார்? ஹனான்தான் வந்து எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.
ஹனான் உதவிக்கு வந்தவுடன் நிமிஷா அங்கிருந்த கிளம்பியிருக்கிறாள். எனவே, உள்ளே என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை. ஹனான் தனது பெயரைச் சொல்ல வேண்டாம் என்று நிமிஷா பிரியாவைக் கேட்டுக் கொண்டிருந்தாராம். ஆபத்தான நேரத்தில் உதவியதால்தான் அந்தப் பெண்ணின் பெயரைச் சொல்ல முடியவில்லை என்று நிமிஷா கூறினார்.
ஹனான் சொன்னபடிதான் நிமிஷா அங்கிருந்து இடம் மாறித் தங்குகிறார். அந்தச் சமயத்தில்தான் போலீஸ் இவள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. கொலை செய்துவிட்டு தலைமறைவானார் என்ற தண்டனையும் நிமிஷாவின் பெயரில் வந்துள்ளது. ஹனான் பற்றித் தெளிவாக விசாரித்தால் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற முடியும் என்று நான் கருதுகிறேன்" என்று கிருபா கூறியுள்ளார்.
-
துணிச்சலாக ஜப்பான் எடுத்த அந்த ஒரு முடிவு.. உலக நாடுகளே உற்று பார்க்குது.. இதுதான் ஒரே தீர்வு -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications