இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் கேரளா நர்ஸ் பலி.. கணவருடன் வீடியோ காலில் பேசும் போது சோகம்!
திருவனந்தபுரம்: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கேரளத்தை சேர்ந்த 31 வயது பெண் உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர்.
Recommended Video
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தலத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன் தினம் முதல் மோதல் வெடித்தது.
இதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது.

30 பேர் பலி
இதில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முழுவதும் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.

பொதுமக்கள்
காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கட்டடம் மீது தாக்குதல்
இந்த நிலையில் காசா டவர் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இதில் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அலிவ் மற்றும் பிற நகரங்களில் விழுந்தன.

கேரளா பெண் பலி
இதில் பேருந்து, வாகனங்கள், கட்டடங்கள் தீயில் கருகின. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். அதில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கஞ்ச்குஷி பஞ்சாயத்தை சேர்ந்த 31 வயது சவுமியா. செவிலியரான இவர் இஸ்ரேலின் அஷ்கிலான் நகரில் பணியாற்றி வந்தார்.

ராக்கெட்
இவர் நேற்று இரவு அஷ்கிலான் நகரில் தனது வீட்டில் இருந்து கேரளாவில் உள்ள தனது கணவர் சந்தோஷிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவிய ராக்கெட், சவுமியாவின் வீட்டின் மீது விழுந்ததில் சவுமியாவின் அலறல் சத்தம் கேட்டது. இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. பின்னர் அதே அஷ்கிலான் நகரில் உள்ள சவுமியாமின் உறவினர் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது சவுமியா உயிரிழந்து கிடந்தார்.

2 ஆண்டுகளுக்கு முன்னர்
10 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வந்த சவுமியாவுக்கு 10 வயதில் மகன் உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவிற்கு வந்து குடும்பத்தினரை சந்தித்துவிட்டு இஸ்ரேல் சென்ற சௌமியா வரும் ஜூலை மாதம் மீண்டும் சொந்த ஊரான கேரளா வர திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications