7 முறை எம்எல்ஏ பிசி ஜார்ஜின் கேரள ஜனபக்ஷம் கட்சி பாஜகவுடன் ஐக்கியம்- கிறிஸ்தவர் ஓட்டுகளுக்கு குறி!
திருவனந்தபுரம்: கேரளாவில் 7 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற பிசி ஜார்ஜின் கேரள ஜனபக்ஷம் கட்சி பாஜகவுடன் இணைய முடிவெடுத்துள்ளது. லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர் வாக்குகளை அறுவடை செய்யும் வகையில் கேரள ஜனபக்ஷம் கட்சியை பாஜக இணைத்துள்ளது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் பிசி ஜார்ஜ். காங்கிரஸ் கட்சியில் பயணித்து வந்த பிசி ஜார்ஜ் 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கேரளா காங்கிரஸ் (ஜோசப்) கட்சியில் இணைந்தார். பின்னர் கேரள காங்கிரஸ் (மதச்சார்பற்றது) என்ற கட்சி உருவானது. இக்கட்சி இடதுசாரிகளின் ஐக்கிய முன்னணியில் இணைந்திருந்தது. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் காங்கிரஸ் ஜனநாயக முன்னணியில் இணைந்தது. பின்னர் கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியுடன் இணைந்தது. கேரள காங்கிரஸ்( மதச்சார்பற்றது) கட்சியில் இருந்து பிசி ஜார்ஜ் வெளியேற்றப்பட 2019-ல் கேரள ஜனபக்ஷம் கட்சியை தொடங்கினார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் கேரள ஜனபக்ஷம் கட்சி இடம் பெற்றிருந்தது. கேரளாவின் பூஞ்சார் சட்டசபை தொகுதியில் 7 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவர் பிசி ஜார்ஜ். 2021 சட்டசபை தேர்தலில் பூஞ்சார் தொகுதியில் பிசி ஜார்ஜ் தோல்வியைத் தழுவினார்.

தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் கடைசியாக பாஜகவிலேயே ஐக்கியமாகவும் பிசி ஜார்ஜ் முடிவெடுத்துள்ளார். லோக்சபா தேர்தலில் கிறிஸ்தவர்கள் வாக்குகளை அறுவடை செய்ய முடியும் என்ற கணக்குடன் பிசி ஜார்ஜ் கட்சியை பாஜக இணைத்துக் கொள்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
கேரள லாட்டரியில் ரூ.1 கோடி + 25 லட்சம்.. எர்ணாகுளத்திற்கு அடுத்தடுத்து பரிசு மழை! வின்னர் யார்? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications