பொது இடத்தில் குப்பை கொட்டுறாங்களா.. போட்டு கொடுங்க.. பரிசுத்தொகை தர்றோம்.. கேரள அரசு அடுத்த அதிரடி
திருவனந்தபுரம்: கேரளாவில் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்துவதை தடுக்க புதிய முயற்சியை அம்மாநில அரசு கையில் எடுத்துள்ளது. அதாவது பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்கள் பற்றி ஆதாரத்துடன் தகவல் கொடுத்தால் ரூ.2,500 பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் மாநிலம் கேரளா. கேரளா மாநிலம் பெரும்பாலான இடங்கள் மலைகளும் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களாகவும் காட்சியளிக்கும். சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாகவும் உள்ள கேரளா சுற்றுச்சூழலுக்கு மிகுந்த அக்கறை கொடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு எடுத்து வருகிறது.

ஆனாலும் சமீப காலமாக கேரளாவில் பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி செல்வது பெரும் சவாலாக உள்ளது. கேரளாவில் பொது இடங்கள், ஆறு உள்பட நீர்நிலைகளில் குப்பையை கொட்ட ஏற்கனவே தடை இருக்கிறது. ஆனாலும் இந்த தடைகளை கண்டு கொள்ளாமல் மக்கள் யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் குப்பை, கழிவுகளை கண்ட இடங்களிலும் சிலர் கொட்டி செல்கின்றனர்.
இதனால் பல இடங்களிலும் குப்பைகளாக சாலைகளில் சிதறிக்கிடப்பது கேரள மாநிலத்தின் அழகை கெடுக்கும் விதமாக இருப்பதாக அங்குள்ள சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கண்ட இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க புதிய யுக்தியை கேரள அரசு கையாண்டுள்ளது. அதாவது, குப்பைகள் மற்றும் கழிவுகளை அனுமதிக்கப்படாத இடங்களான பொது இடங்களிலோ அல்லது ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளிலோ போடுபவர்கள் குறித்து புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரத்துடன் உள்ளாட்சி அலுவலங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அப்படி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.2,500 பரிசாக வழங்கப்படும். தகவல் கொடுக்க்கும் நபர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டுபவர்கள் பற்றிய விவரங்களை அளிப்பதற்காக வாட்ஸ் அப் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் விளம்பர படுத்த இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
குப்பை கொட்டும் நபர்களுக்கு குறைந்தது ரூ.250 அபராதம் விதிக்கப்படும் எனவும் நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தினால்ரூ.5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் கேரள அரசு எச்சரித்துள்ளது. அது மட்டும் இன்றி உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் மீறி குப்பைகளை கொட்டினால் விதிமீறல்கள் குறித்து தகவல் தெரிவிப்பது மக்களின் கடமை என்று அறிவுறுத்த வேண்டும் என்ற மேலும் சில அறிவிப்புகளும் கேரள அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குப்பைகளை எடுத்து செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் தேவைப்பட்டால் கைது செய்து விதி மீறியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications