கேரளாவை பாஜக கைப்பற்றியே ஆகணும்.. பிரதமர் மோடியின் பேச்சில் மாற்றம்.. கவனிச்சீங்களா!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றது. இதை கொண்டாடும் வகையிலும், கேரளா சட்டசபை தேர்தலில் பிரசாரத்தை தொடங்கும் வகையிலும் நேற்று பிரதரமர் மோடி திருவனந்தபுரம் வருகை தந்தார். அப்போது அவர் தனது உரையை முழுவதுமாக மாற்றியிருந்தார். இது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் பாஜக கேரளாவை கைப்பற்ற புதிய வியூகத்தை வகுத்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

தமிழகத்தை போல் விரைவில் கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தான் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை முதல் முறையாக பாஜக கைப்பற்றியது. 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக வசமாகி உள்ளது.
இது பாஜகவுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்நிலையில் தான் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தல் வெற்றி மற்றும் கேரளாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் வழக்கமான முறையில் பேசவில்லை. பொதுவாக மோடி பேசும்போது, "மோடியின் சர்க்கார்" அல்லது "பாஜகவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்கான வாக்கு" என்று தன்னை மையப்படுத்தி பெருமையாக வாக்கு சேகரிப்பார். ஆனால் நேற்றைய உரையில் அவர் "என்டிஏ" அரசு என்று மட்டுமே குறிப்பிட்டு பேசினார்.
இருப்பினும் ஒரு இடத்தில் கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், சபரிமலை தங்க திருட்டு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அனைத்துக் குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்படுவார்கள். இது மோடியின் உத்தரவாதம்'' என்று கூறினார். மற்ற விஷயங்களை பேசும்போது மோடி என்று அவர் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை. குறிப்பாக கம்யூனிஸ்டுகளால் கூட்டுறவு வங்கி கணக்குகளிலிருந்து திருடப்பட்ட ஒவ்வொரு பைசாவும் திருப்பி அளிக்கப்படும் என்று மட்டுமே கூறினார். அதில் மோடி உத்தரவாதம் என்று அவர் கூறவில்லை.
இந்த முறை முதலமைச்சர் பினராயி விஜயன் மீதோ அல்லது அவர் எப்போதும் குறிவைக்கும் ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீதோ தனிப்பட்ட முறையில் எதையும் தாக்கி பேசவில்லை. சபரிமலை தங்க திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உன்னிகிருஷ்ணனை, சோனியா காந்தி தனது இல்லாத்தில் சந்தித்தது பற்றி கூட மோடி பேசவில்லை.
கடந்த 2024 ஜனவரியில் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சூரில் பேசிய மோடி, முதல்வர் பினராயி விஜயனை மறைமுகமாகதாக்கி பேசியிருந்தார். அப்போது "கேரளாவில் தங்க கடத்தலுக்கு மையமாக இருந்த அலுவலகம் எது என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று அவர் கூறினார். இதன்மூலம் அவர் முதலமைச்சர் அலுவலகத்தை சுட்டி காட்டியிருந்தார்.
அதன்பிறகு ஒரு மாதம் கழித்து திருவனந்தபுரம் வந்தபோது, மேலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும், ஒரே ஒரு குடும்பத்தின் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளன. இரு கட்சிகளும் ஊழல் நிறைந்தவை. அவற்றின் ஊழல் கேரளாவின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்று மீண்டும் மீண்டும் கூறினார். அதேபோல் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதால், கம்யூனிஸ்ட் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒருவருக்கொருவர் ஆதரவாக உள்ளனர் என்று சாடியிருந்தார்.
ஆனால் இந்த முறை அப்படி எதையும் பிரதமர் மோடி பேசவில்லை. அதுபோன்ற விஷயங்களை பேசினால் மக்கள் கவனிக்க மாட்டார்கள். சொன்ன குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் கூறினால் அது வேலைக்கு ஆகாது என்று நினைத்து பிரதமர் மோடி இந்த முறை தனது டோனை மாற்றினார். தனது பெயரை முன்நிறுத்துவதை விட்டுவிட்டு என்டிஏ ஆட்சி என்று கூறினார். அதேபோல் ராகுல் காந்தியின் குடும்பம், முதல்வர் பினராயி விஜயன் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை அவர் கைவிட்டார்.
ஆனால், இந்த இயல்பான அன்பு வெளிப்பாடுகளை கேலி செய்வதற்கு ரீல்ஸ் (Reels) தயாரிக்கும் நபர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் ரீல்ஸ் தயாரிக்கட்டும், ஆனால் மக்கள் என் மீது பொழியும் அன்பு இந்த அவமானங்களை விட கணிசமாகப் பெரியது," என்று மோடி கூறினார். அதேபோல், மத்திய அரசின் திட்டங்கள் பற்றியும், மத்திய அரசு திட்டத்தால் கேரளாவில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே கூறி வாக்கு சேகரித்தார்.
மேலும் திருவனந்தபுரம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதால் பிரதமர் மோடி பணிவுடன் காணப்பட்டார். நேற்றைய கூட்டம் தொடங்கும்போது பாஜகவினர் முன்பு 3 முறை தலைகுனிந்து வணங்கி நன்றி செலுத்தினார். இதனால் தற்போது பிரதமர் மோடி மற்றும் பாஜக கேரளாவை கைப்பற்ற வியூகத்தை மாற்றி இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications