ராகுல் காந்தி தகுதி நீக்கம்- வயநாடு தொகுதி இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி போட்டியிடுகிறாரா?
திருவனந்தபுரம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வென்ற வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிப்பின் போது ராகுல் காந்தி வென்ற வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
கேரளாவின் வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான உபியின் அமேதி மற்றும் கேரளாவன் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்திரா குடும்பத்தில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி வென்ற தொகுதிதான் அமேதி. ஆனால் 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.
ஆனால் வயநாடு தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெற்றார். வயநாடு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி 64.67% வாக்குகளைப் பெற்று மிரட்டலான வெற்றி வாகை சூடினார். ராகுலை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ-க்கு 25% வாக்குகள்தான் கிடைத்தது.
இந்த நம்பிக்கையில் தற்போது வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றால் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, போட்டியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றியானது அவரை இன்னொரு இந்திரா காந்தியாக உருவாக்கக் கூடும் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பது காங்கிரஸ் கட்சியினர் கருத்து.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications