கேரளா முழுக்க "ராகுல்" அலை! காங்கிரசுக்கு பெரிய வெற்றி.. பாஜகவுக்கு ஒரு சீட் கூட இல்லை! பரபர சர்வே
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரசியல் களம் எப்படி இருக்கிறது. அங்கே எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குவதால் பிரச்சாரம் மிக தீவிரமாக நடந்து வருகிறது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.
கேரளா: இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பின் சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய ஆதரவு அலை வீசுகிறது. இடதுசாரிகளால் ஓரிரு இடங்களை மட்டுமே வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், பாஜகவால் அங்கு ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
எத்தனை இடங்கள்: கேரளாவில் மொத்தம் 20 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே 18-20 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இடதுசாரிகளின் எல்டிஎஃப் கூட்டணி வெறும் 0-2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாது என்றும் அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
"முத்திரை பதிக்கும் பாஜக.." அத்தனை எதிர்ப்புகளையும் காலி செய்த அந்த ஒரு மேட்டர்.. பரபர சர்வே முடிவு
கேரளாவில் மாநில அரசுக்கு எதிரான மனநிலை மக்களிடையே இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாக்குகள் அப்படியே காங்கிரஸ் பக்கம் செல்கிறது. கேரளாவில் உள்ள கிறிஸ்துவர்களின் வாக்குகளைப் பெற பாஜக முயல்கிறது. இருப்பினும், மணிப்பூர் பிரச்சினை மற்றும் தேசிய அளவில் கிறிஸ்துவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் காரணமாகக் கிறிஸ்தவ வாக்காளர்கள் காங்கிரஸ் பக்கம் திரும்பியுள்ளனர்.
காரணங்கள்: அதேபோல அங்குள்ள இஸ்லாமியர்கள் ஆதரவும் கூட காங்கிரஸ் பக்கமே இருக்கிறது. இந்துத்துவ வாக்காளர்களைக் கவர பாஜக எடுக்கும் முயற்சிகள் அங்குப் பலன் தரவில்லை.. பலவீனமான வேட்பாளர்கள் பாஜகவுக்குச் சாதகமாகவே இல்லை. இவை எல்லாம் சேர்த்து கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
கேரள அரசியல்: கேரளாவில் கடந்த 2019 தேர்தலைப் பொறுத்தவரை அங்குள்ள 20 இடங்களில் காங்கிரஸ் கட்சி அப்படியே 15 இடங்களில் வென்றது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும் கேரள காங்கிரஸ் மார்க்சிஸ்ட், ஆர்எஸ்பி தலா ஒரு இடத்திலும் வென்றது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி மட்டும் 19 இடங்களில் அங்கே வென்றது. மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த சிபிஎம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது.
தேசியளவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஒரே இந்தியா கூட்டணியில் இருந்தாலும் கேரளாவில் அவர்கள் தனித்தனியாகவே களமிறங்குகிறார்கள். அங்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே தான் நேரடியாகப் போட்டி நிலவுகிறது. இது தவிர பாஜகவின் என்டிஏ கூட்டணியும் அங்கே போட்டியிடுகிறது. கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அங்கு வரும் ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications