ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்.. இருமுடியை இனி விமானத்தில் எடுத்து செல்லலாம்! மத்திய அரசு அனுமதி
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இருமுடியை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், விமானத்தில் இருமுடியை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், தங்களது இருமுடியை இன்று முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

"இருமுடியின் மீது பக்தர்கள் கொண்டுள்ள ஆழமான உணர்வுகளை புரிந்து கொண்டு, விமானத்தில் இரு முடியை கொண்டு செல்ல அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில், அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
விமானத்தில் செல்பவர்கள் 100 மி.லி-க்கு மேல் திரவப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவது கிடையாது. அதாவது இந்த பொருட்கள் லக்கேஜ் பிரிவில் வரவேண்டும். கையில் எடுத்துச் செல்லப்படும் திரவப் பொருட்கள் 100 மி.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும். ஐயப்ப பக்தர்கள் கொண்டு செல்லும் இருமுடியில் நெய் தேங்காய் இடம் பெற்று இருக்கும். இதில் உள்ள நெய் 100 கிராமுக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், கையில் எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது.
ஆனால், இருமுடியை பதிவு செய்யப்பட்ட உடமையாக லக்கேஜ் கொண்டு செல்ல முடியும். இந்நிலையில் தற்போது கையில் கொண்டு செல்ல மத்திய அமைச்சர் அனுமதி வழங்கியிருக்கிறார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications