ஐயனை துதிக்கையிலே தன்னை மறந்திடுவார்..சங்கடமில்லாமல் சபரிமலைக்கு போகலாம்! வெளியான சூப்பர் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப் பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த பாதைகள் வழியாக சபரிமலை செல்லலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.

இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.
தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அன்று முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நெய், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு நடை சாற்றப்பட்டு பின்னர் மூன்று மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
பின்னர் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலையில் பின்னர் ஹரிவராசனம் இசைக்கப்பட்டு ஐயன் ஐயப்பன் துயில் செல்கிறார். இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தேனி, கம்பம், குமுளி உள்ளிட்ட மலைப் பாதைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப் பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கேரளா போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து, கம்பம் மெட்டு, சேத்துகுழி, ஆமையார், புளியன் மலை, கட்டப்பனை, ஏழப்பரை, குட்டிக் காணம், எரிமேலி வழியாக கோயிலுக்கு செல்கின்றனர். சில நேரங்களில் கம்ப மெட்டு அடைந்த பின் பல பாதைகள் இருப்பதால் பக்தர்கள் புலம்புகின்றனர். இதை அடுத்து உரிய பாதையை கேரள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கம்ப மெட்டிலிருந்து, அந்நியார் தொழுவ வழியாக புளியன் மலை சென்று அங்கிருந்து கட்டப்பனை,ஏழப்பாறை, குட்டிக்காணம், எரிமேலி செல்லலாம். இதே போல் கம்பமெட்டு, சேத்துக்குழி, அந்நியார் தொழ், புலியன் மலை, கட்டப்பனை, ஏழைப்பாறை வழியாக செல்வது நல்லது. அல்லது கம்பம் மெட்டு, சேத்துக்குளி, ஆமையாறு, புத்தடி, செல்ல் மடை பின் குமுளி சென்று வழக்கம் போல வண்டிப்பெரியாறு, பீர்மேடு குட்டி கானம், எரிமேலி வழியாக செல்லலாம் என போலீசார் கூறியுள்ளனர். மேலும், மலைப் பாதைகளில் எப்படி செல்வது என்பது குறித்து காவல்துறையினர் ஆங்காங்கே வரைபடங்களும் வழிகாட்டி பதாகைகளும் வைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications