சாதிவெறி பிடித்த ஆர்எஸ்எஸ்தான் சபரிமலை பிரச்சனைக்கு காரணம்.. பினராயி பரபரப்பு குற்றச்சாட்டு!
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக நடக்கும் போராட்டம் அனைத்திற்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் காரணம் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கேரளாவில் சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரம் நடப்பதை தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
[நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்! ]

இதுவரை செல்லவில்லை
இரண்டு நாட்கள் ஆகியும் இதுவரை சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் யாரும் செல்லவில்லை. இந்துத்துவா அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்கள் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. மீறி செல்லும் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
|
என்ன கசக்கிறது
பினராயி விஜயன் தனது டிவிட்டில், மற்ற கோவில்களுக்கு இல்லாத தனித்தன்மை சபரிமலை கோவிலுக்கு உள்ளது. எல்லா மதத்தினரையும் இந்த கோவில் உள்ளே அனுமதிக்கிறது. அதுதான் ஆர்எஸ்எஸுக்கு பிரச்சனையாக உள்ளது. அதை அழிக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது முயல்கிறார்கள்.
|
ஆர்எஸ்எஸ் அமைப்பு
சபரிமலையில் ஆதிவாசிகள் செய்த வழிபாட்டு முறையை நீக்க ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் காரணமாக இருந்தனர் என்று எல்லோருக்கும் தெரியும். தற்போது நடக்கும் பிரச்சனையின் உண்மைநிலை உலகிற்கு தெரிய வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் மக்கள் மீதும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது.
|
ஜாதி வெறி
இவர்கள் எல்லோரும் ஜாதி வெறியும், நிலவெறியும் பிடித்து இந்த தாக்குதலை நடத்துகிறார்கள். இதை ஆதரிப்பது சபரிமலையில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். பக்தர்கள் அனைவரும் மக்கள் மீதான இதுபோன்ற தாக்குதல்களை கண்டிக்க வேண்டும், என்றுள்ளார்.












Click it and Unblock the Notifications