நடை திறக்கும் முன் நான் சென்றுவிடுகிறேன்.. சபரிமலைக்காக குருசாமி தற்கொலை.. உருக்கமான கடிதம்!
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Recommended Video

திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவை சேர்ந்த குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சபரிமலை போராட்டம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.
அங்கு பெண்கள் நுழைவிற்கு எதிராக பெரிய போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்கு குருசாமி ராமகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யார் இவர்
யார் இவர் கேரளாவை சேர்ந்த ராமகிருஷ்ணன் 85 வயது நிரம்பியவர். கேரளாவின் பந்தளூர் அருகே உள்ளே கிராமம் ஒன்றில் வசித்து வந்தார். கடந்த 60 வருடமாக இவர் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வந்துள்ளார். இவர் குருசாமி என்று சக பக்தர்களால் அழைக்கப்பட்டவர்.

குரல் கொடுத்தார்
சபரிமலை தீர்ப்பிற்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். கடந்த சில நாட்களாக கேரளா மீடியாக்களில் தொடர்ந்து இவர் தோன்றி வந்தார். சபரிமலை பிரச்சனை தொடர்பாக நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

தற்கொலை செய்தார்
இந்த நிலையில் நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டார். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வருகிறது. சபரிமலை போராட்டம் மற்றும் தீர்ப்பின் துக்கம் தாங்காமலும், அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள்.

கடிதம் இருந்தது
இந்த நிலையில் அவரின் பாக்கெட்டில் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதில், இதுதான் என் கடைசி நாள். அந்த கோவிலின் கதவுகள் திறக்கும் முன் நான் இந்த உலகைவிட்டு சென்றுவிட வேண்டும், என்று சிறிய கடிதம் எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் கேரளாவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications