நடிகைக்கு நடிகரால் நேர்ந்த கொடூரம்! 11 ஆயிரம் வீடியோ, 2 லட்சம் போட்டோ மீட்பு! தலைசுற்றி போன போலீசார்
திருவனந்தபுரம் : 2017ஆம் ஆண்டு கேரளாவில் முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை விசாரிக்கும் சிறப்பு குற்றப்பிரிவுக் குழுவினர், 11,161 வீடியோக்கள், 22,000 ஆடியோக்கள், 2 லட்சம் புகைப்படங்கள் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 2017ஆம் ஆண்டு கேரளாவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு செல்லும் போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அப்போது அந்த கும்பல் நடிகையை வீடியோ எடுத்ததாகவும் இந்த கும்பலுடன் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்தனர்.

நடிகை பாலியல் வழக்கு
இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில் நடிகர் திலீப் பயன்படுத்திய செல்போன்களில் இருந்த ஆடியோக்கள் கேட்கப்பட்டன. அதனடிப்படையில் நடிகை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நடிகரின் மனைவி காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் வழக்கை விசாரிக்கும் சிறப்பு குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார், நடிகர் திலீப் மற்றும் அவரது உறவினர், கூட்டாளிகளின் செல்போன்களில் இருந்து 11,161 வீடியோக்கள், 22,000 ஆடியோக்கள், 2 லட்சம் புகைப்படங்கள் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 லட்சம் பாலியல் வழக்கு
செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றில் இருந்து 11,161 வீடியோக்களை மீட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கையானது, செல்போன்களில் இருந்து அழிக்கப்பட்டு மீண்டும் மீட்கப்பட்ட உள்ளடக்கியது ஆகும். இந்த வீடியோக்களில் 6,682 வீடியோக்களை குற்றப்பிரிவு குழு இன்னும் ஆய்வு செய்யவில்லை. இதேபோல், 11,238 ஆடியோ கிளிப்புகள் சரிபார்க்கப்பட்ட நிலையில், மேலும் 10,879 ஆடியோ கிளிப்புகள் அதிகாரிகளால் கேட்கப்பட உள்ளன.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
புலனாய்வு போலீசார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் ஆய்வு செய்துள்ள நிலையில், 65,384 இன்னும் சரிபார்க்கப்படவில்லை. 1,597 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டநிலையில் 779 எஞ்சியுள்ளன. தடயவியல் நிபுணர்கள் தயாரித்து வரும் அறிக்கை ஏற்கனவே இரண்டு லட்சம் பக்கங்களைத் தொட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளாக உள்ள அவர்களது உறவினர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளது.

இறுதி அறிக்கை தாக்கல்?
வழக்கு குறித்த முன்னேற்றங்கள் அனைத்தும், விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பால் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையில் சேர்க்கப்படும். தற்செயலாக, தற்போதைய விசாரணையின் இறுதி அறிக்கையை ஏப்ரல் 18 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு விசாரணை நீதிமன்றம் அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில், விசாரணைக் குழுவின் பணியை முடிக்க மேலும் 3 மாதங்கள் கோரிய மனுவை கேரள உயர்நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications