5 வயது சிறுமியை கொடூரமாக சீரழித்துக் கொன்ற வளர்ப்புத் தந்தை.. மரண தண்டனை விதித்தது நீதிமன்றம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து பத்தனம்திட்டா நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உடலில் 67 காயங்களுடன் 5 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் அந்தரங்க உறுப்புகள், முகம் உட்பட உடல் முழுக்க காயங்கள் இருந்தன. வீட்டு வேலை செய்யும் அந்தக் குழந்தையின் தாய், மதியம் வீட்டுக்கு வந்தபோது குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. குழந்தைக்கு அருகில், போதையில் அப்பெண்ணின் இரண்டாவது கணவர் படுத்திருந்தார்.

வளர்ப்புத் தந்தையே, பச்சிளம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. சிறுமியின் தாயார் அளித்த புகாரில், அவரது இரண்டாவது கணவரான தமிழ்நாட்டின் ராஜபாளையத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதமே போலீசார் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பத்தனம்திட்டா அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வளர்ப்பு தந்தைக்கு, மரண தண்டனை விதித்து பத்தனம்திட்டா கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜெயக்குமார் ஜான் தீர்ப்பு அளித்துள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications