மத்திய அமைச்சரின் வேட்புமனுவுக்கு பண உதவி.. நெகிழ வைத்த கேரளா மாணவ-மாணவிகள்.. சுவாரசிய பின்னணி
திருவனந்தபுரம்: கேரளா லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கல்லூரி மாணவ-மாணவிகள் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணத்தை வழங்கினர். இந்நிலையில் தான் மத்திய அமைச்சருக்கு அந்த மாணவி ஏன் வேட்புமனு தாக்கலுக்கு பணம் வழங்கினார் என்பதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேரளாவில் மொத்தம் 20 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் 3 கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். வேட்பு மனு தாக்கல் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மத்திய அமைச்சர் முரளிதரன் போட்டியிடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சராக முரளிதரன் உள்ளார். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். முரளிதரன் கேரளாவில் உள்ள அட்டிங்கால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்பியாக அடூர் பிரகாஷ் உள்ளார். இவர் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் முரளிதரனை எதிர்கொள்ள உள்ளார்.
‛‛தேர்தல் செலவுக்கு பணம் இல்லையாம்’’.. தமிழகத்தில் போட்டியிடாதது ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்நிலையில் தான் முரளிதரனின் வேட்புமனு தாக்கலுக்கு தேவையான பணத்தை கல்லூரி மாணவ-மாணவிகள் வழங்கி உள்ளனர். லோக்சபா தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த ரூ.25 ஆயிரத்தை தான் மாணவ-மாணவிகள் வழங்கி உள்ளனர். இந்த பணத்தை வைத்து தான் முரளிதரன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தேர்தலுக்கு பணமில்லையா? மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையே தான் அந்த மாணவ-மாணவிகள் எதற்காக முரளிதரனின் வேட்புமனுத்தாக்கலுக்கு பணம் கொடுத்தனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பணம் வழங்கிய மாணவ-மாணவிகள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்கள் உக்ரைன் நாட்டு கல்லூரிகளில் படித்தனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய நிலையில் மாணவ-மாணவிகள் அங்கு தவித்தனர். மத்திய அரசு மாணவ-மாணவிகளை பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வந்தது.
ராகுலுக்கு எதிராக போட்டியிடும்.. பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்! பரபர கேரள தேர்தல் களம்
இதில் மத்திய வெளியுறவுத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. இந்நிலையில் தான் மத்திய வெளியறவுத்துறை இணை அமைச்சராக உள்ள முரளிதரனுக்கு உக்ரைனில் இருந்து திரும்பி மாண-மாணவிகள் வேட்புமனுவுக்கான ரூ.25 ஆயிரத்தை வழங்கி உள்ளனர். உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு வந்ததற்கு நன்றி கூறும் வகையில் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இந்த பணத்தை வழங்கி உள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications