ஆஹா! அரசு பஸ்சில் இப்படியொரு வசதியா?.. பயணிகளுக்கு ஸ்னாக்ஸ், டீ, பிஸ்கட்ஸ்.. எங்கேன்னு பாருங்க
திருவனந்தபுரம்: பேருந்துகளில் தொலை தூர பயணம் செய்யும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்துக்குள்ளேயே டீ, பிஸ்கட்ஸ், நொறுக்குத்தீனிகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசே முடிவு செய்துள்ளது. பயணிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டம் எந்த மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது என்பது பற்றி இங்கே பார்ப்போம்
தொலைதூரம் செல்லும் பயணிகள், பயணத்தின் போது சாப்பிடுவதற்காக நொறுக்குத்தீனிகள், கூல்டிரிங்ஸ்களை வாங்கி வைத்து இருப்பார்கள்.. ரயிலில் செல்லும் போது, ரயிலுக்குள்ளேயே உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை வாங்கி பயணிகள் எளிதில் சாப்பிட முடியும்.

பேருந்துகளில் டீ, காபி: அதே வேளையில் பேருந்துகளில் இது சாத்தியம் இல்லை. சில தனியார் பேருந்துகளில் பயணிகளை கவருவதற்காக வாட்டர் பாட்டில், பப்ஸ், மிக்சர் உள்ளிட்டைவகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும் இத்தகைய சொகுசு ஆம்னி பஸ்களில் பயண கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக இருக்கும். இதனால், நடுத்தர வசதி கொண்ட மக்கள் அந்த பஸ் பக்கமே போவது இல்லை.
கேரள அரசு முடிவு: பயணத்தின் போது கொஞ்சம் புத்துணர்ச்சி பெற அரசு பேருந்துக்குள்ளேயே டீ, காபி, ஸ்நாக்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும் என பயணிகள் சில சமயம் நினைப்பதுண்டு. இப்படியொரு திட்டத்தைத்தான் விரைவில் கேரள மாநில அரசு தங்கள் மாநில பேருந்துகளில் அமல்படுத்த உள்ளதாம். கேரளாவில் தொலை தூரங்களுக்கு கேஎஸ் ஆர்டிசி - ஸ்விப்ட் என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் கேரளாவில் இருந்து அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தான் விரைவில் பயணிகளுக்கு ஸ்நாக்ஸ், டீ, காபி ஆகியவை வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் டிவிக்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடத்தின் அருகிலேயே இதற்கான இயந்திரம் வைக்கப்பட்டு இருக்கும்.
கட்டணம் எப்படி வசூலிக்கப்படும்?: தேவைப்படும் பயணிகள் காபி, டீ போன்றவற்றையும் ஸ்நாக்ஸ்களையும் எடுத்துக்கொள்ள முடியும். தனியார் மூலமாக இந்த திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரையும் கேரள மாநில அரசு போக்குவரத்து கழகம் கோரியுள்ளது. அதேவேளையில் பயணிகளிடம் இதற்காக கட்டணம் எப்படி வசூலிக்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை.
அதாவது டிக்கெட் கட்டணத்தோடு செலுத்த வேண்டுமா? அல்லது தேவைப்படும் பயணிகள் மட்டும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாமா? என்பது பற்றி அறிவிக்கப்படவில்லை. இந்த திட்டம் அமலுக்கு வரும் முன்பாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
ஸ்டியரிங்கை தொடவே வேண்டாம்.. வளைவே இல்லாமல் 256 கிமீ நேராக செல்லும் ஹைவே.. எங்கே இருக்குது தெரியுமா?
மங்களூர், பெங்களூர், மைசூர்: இந்த திட்டம் முதல் கட்டமாக கேரளாவின் பத்தினம் திட்டாவில் இருந்து மங்களூர், பெங்களூர், மைசூர் போன்ற நகரங்களுக்கு இயக்கப்பட்டு வரும் ஸ்விப்ட் பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த திட்டம் அமலுக்கு வரும் போது பல்வேறு சவால்கள் அரசுக்கு இருப்பதாகவும் பயணிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது. ஏனெனில், தொலை தூர பஸ்கள் பெரும்பாலும் இரவில் தான் செல்கின்றன.
வரவேற்பு கிடைக்குமா?: இதனால், இரவு நேரத்தில் பயணம் செய்யும் பயணிகள் மத்தியில் இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அதேபோல், பஸ்கள் நிறுத்தப்படும் மோட்டல்களிலேயே தங்களுக்கு தேவையான உணவு பண்டங்களை பயணிகள் வாங்கி விடுகிறார்கள். எனவே, பஸ்களில் பயணம் செய்யும் போதே வாங்க முன்வருவார்களா? என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications