ஊற்றுவதற்கு வந்த ஊறு.. கேரளாவில் அதிரடியாக உயரும் மதுபான விலை! பெட்ரோலும் ரூ.2 அதிகம்
கேரள பட்ஜெட்டில் மதுபானங்கள் மற்றும் பெட்ரோலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்கள் ரூ.40 வரையிலும் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் அளவிலும் உயரும்.
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசு சார்பில் இன்று சட்டப்பேரவையில் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் நலத்திட்டங்களுக்கும், விலைவாசியை சமாளிக்கவும் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மதுபான வகைகளுக்கும், பெட்ரோலுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இதனையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கியுள்ளன. அந்த வகையில் இன்று(பிப்.03) கேரள அரசு தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. முன்னதாக கடந்த 23ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக வாசிக்கவில்லை என்று சர்ச்சை எழுந்தது.
தமிழ்நாட்டில் நிலவுவதை போல மாநில அரசு-ஆளுநர் மோதல் போக்கு கேரளாவிலும் நிலவி வருவதால், மாநில அரசின் உரையை ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் முழுமையாக வாசிப்பாரா? என்று அனைவராலும் கவனிக்கப்பட்டது. ஆனால் எந்த சர்ச்சையும் இல்லாமல் அவர் முழு உரையையும் ஒரு வார்த்தைக்கூட விடாமல் வாசித்து முடித்தார். இதில் மத்திய அரசின் மீது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

விலைவாசியை சமாளிக்க
இதனையடுத்து மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், மேற்குறிப்பிட்டுள்ளதைப்போல நலத்திட்டங்களுக்கும், விலைவாசியை சமாளிக்கவும் அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு ரூ.100 கோடியும், விலைவாசி உயர்வை சமாளிக்க ரூ.2,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர உட்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

மதுபானம்
அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீது ரூ.2 உயரும் அளவுக்கு செஸ் வரி உயர்த்தப்படும் என்றும் இதன் மூலமாக மாநிலத்திற்கு ரூ.750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது. மறுபுறம் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்சார மோட்டார் வண்டிகள் மற்றும் மின்சார சுற்றுலா மோட்டார் வண்டிகள் மீதான ஒரு முறை வரி கொள்முதல் மதிப்பில் 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு காற்று மாசு குறையும் என்று அரசு கூறியுள்ளது.

பெட்ரோல்
அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீது ரூ.2 உயரும் அளவுக்கு செஸ் வரி உயர்த்தப்படும் என்றும் இதன் மூலமாக மாநிலத்திற்கு ரூ.750 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது. மறுபுறம் மின்சார வாகன பயன்பாட்டை அதிகாரிக்கும் நோக்கில் மின்சார மோட்டார் வண்டிகள் மற்றும் மின்சார சுற்றுலா மோட்டார் வண்டிகள் மீதான ஒரு முறை வரி கொள்முதல் மதிப்பில் 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு காற்று மாறு குறையும் என்று அரசு கூறியுள்ளது.

கடன் கிடையாது
மாநில அரசை பொறுத்த அளவில் மத்திய அரசின் நிதி கொள்கையுடன் ஒன்றி போகாமல் மாற்று பாதையில் சென்றுக்கொண்டுள்ளதாகவும், மட்டுமல்லாது கடன் வாங்கும் அளவை குறைத்துள்ளதாகவும் நிதியமைச்சர் பாலகோபால் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைகள் மாநில அரசின் பொருளாதார சவால்களை எதிர்கொண்டாலும் கேரளா கடன் வலையில் சிக்கவில்லை என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாது கேரளாவில் வறுமையை ஒழிக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications