பிரியாணி பார்சல் வாங்கியவருக்கு அதிர்ச்சி.. கோழியின் முழு தலை அப்படியே கிடந்ததால் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரத்தில் பிரியாணி உணவை பார்சல் வாங்கியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பிரியாணியில் கோழியின் முழு தலை அப்படியே கிடந்தது. இதையடுத்து உடனே உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
ஓட்டல்களில் சாப்பிட போகும் போது பழைய வடிவேலு படத்தின் காமெடி பலருக்கு நியாபகம் வரும்.வெடிகுண்டுமுருகேசன் திரைப்படத்தில் அது வரும். அதில் சாப்பிட வரும் பிரபல நடிகர், என்னடா ஓட்டல் நடத்துறீங்க, என்று கத்துவார். அவர் இல்லை. கோழி, ஆடு, நண்டு, மீன், என பல ஐட்டங்கள் இருக்கும். ஒரு ஈ அங்கு இறந்து கிடக்கும். அதனால் அவர் கத்துவார். உடனே வடிவேலு தலையிட்டு, இங்க கோழி செத்துக்கிடக்கு, அங்க ஆடு செத்துக்கிடக்கு, மீன் செத்துக்கிடக்கு, நண்டு செத்து கிடக்கு, ஒரு ஈ செத்துக்கிடந்தா என்ன என்று கேட்டு வடிவேலு அவரை அவரை அடிப்பார்.

அத்துடன் சாப்பாட்டிற்கு வேண்டிய பணத்தை வாங்கி எடுத்து கொண்டு ஓட பார்ப்பார். இந்த காமெடியை ஒட்டி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இந்த விஷயம் கொஞ்சம் சீரியஸானது. அதில் ஈ செத்துக்கிடந்தது. இங்கு கோழியின் தலையே முழுமையாக உரிக்கப்படாமல் அப்படியே கிடந்துள்ளது. அதுவும் எப்படி பிரியாணிக்குள் கோழித்தலை முழுமையாக கிடந்துள்ளது. நம்மூரில் அல்ல.. கேரளாவின் எர்ணாகுளத்தில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா என்பவர், அண்மையில் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கி உள்ளார். அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்து பார்த்துள்ளார்.
அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்திருக்கிறது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினார்கள்.
பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்ததால் எர்ணாகுளத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டலில் நீங்களும் கரப்பான் பூச்சி, ஈ, வண்டு என எதையாவது பார்த்திருப்பீர்கள். அதைபற்றியும், ஓட்டல் ஓனர்கள் அதற்கு அளித்த பதில் பற்றியும் உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications