கேரளா கோயில் திருவிழாவில் பயங்கரமாக மோதிக்கொண்ட யானைகள்.. அலறியடித்து மக்கள் ஓட்டம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆராட்டுப்புழாவில் நடந்த கோவில் திருவிழாவில் யானைகள் நேருக்கு நேர் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் கோவிலில் உள்ள பக்தர்கள் நாலாபுறமும் சிறதி ஓடினர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
கேரளாவில் கோயில் திருவிழாவில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட இரண்டு யானைகள் ஒன்றுக்கொன்று பயங்கரமாக மோதிக்கொண்டன. ஆக்ரோஷத்துடன் இரண்டு யானைகளும் சண்டையிட்டுக் கொண்டதால் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

அதிக அளவு வனப்பகுதியையும், மலைப் பகுதியையும் கொண்ட மாநிலம் கேரளா. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் யானைகளும் அதிக அளவில் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. அதேபோன்று கோயில் திருவிழாக்களில் யானைகள் அழைத்து வருவது கேரளாவில் வழக்கமாக உள்ளது.
கோவில் திருவிழா: யானைகளுக்கு அலங்காரமிட்டு பூஜைகள் செய்து கோயில் திருவிழாக்களில் பங்கேற்க வைக்கப்படும். கோயில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்காகவே பிரத்தியேகமாக வளர்க்கப்படும் யானைகள் வரவழைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறும். சுவாமி சிலையை தாங்கி வலம் வரும் யானைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட நெற்றி பட்டம் மற்றும் உயர்தர பட்டியல் செய்த பீதாம்பரம் ஆகியவை அணிவிக்கப்படும்.
சில நேரங்களில் இப்படி கோயில் விழாக்களில் கலந்து கொள்ளும் யானைகளுக்கு திடீரென்று மதம் பிடித்து பக்தர்களை ஓட ஓட விரட்டும் அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறுவதுண்டு. தற்போது அதேபோல கோயில் விழாவில் யானைகள் செய்த ரகளையால் பக்தர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். கேரளாவின் ஆராட்டுப்புழா பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நேற்று திருவிழா நடைபெற்றது.
நேருக்கு நேர் மோதிக்கொண்ட யானைகள்: இதில் இரண்டு யானைகள் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. யானைகள் ஆடி அசைந்து ஊர்வலமாக வந்தது. பக்தர்களும் அங்கு திரண்டு இருந்தனர். இரண்டு யானைகளும் நேருக்கு நேர் வந்த போது திடீரென இரண்டும் மோதிக்கொண்டன. யானைகளை கட்டுப்படுத்த பாகன்களால் முடியவில்லை. ஆக்ரோஷமாக யானைகள் மோதிக்கொண்டதை பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக யானைகளை கட்டுப்படுத்தும் குழுவினர் வந்து இரண்டு யானைகளையும் தனித்தனியே கொண்டு சென்றனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 4 பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். யானைகள் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications