கூகுள் மேப்ஸ் காட்டிய வழி! நம்பி காரை திருப்பிய டிரைவர்.. கடைசியில் டிவிஸ்ட்.. கடவுள் புண்ணியம் தான்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காடு அருகே கூகுள் மேப்சை பார்த்து ஓட்டிச் சென்றதில் 30 அடி உயர பாலத்தில் இருந்து கார் ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காரோடு ஆற்றில் மூழ்கி தத்தளித்த 5 பேரையும் அங்குள்ள மக்கள் பத்திரமாக மீட்டனர்.

முன்பெல்லாம் வெளியில் பயணம் மேற்கொள்ளும் போது, வழி தெரியாமல் நின்றுவிட்டால், அக்கம்பக்கத்தில் கேட்டு விசாரித்து செல்வார்கள். ஆனால் தற்போது அனைத்தும் ஒரே கைக்குள் வந்துவிட்டது. செல்போனில் கூகுள் மேப்ஸ்- ஐ பார்த்து நாம் எங்கு இருக்கிறோம்.. எப்படி செல்ல வேண்டும்.. எந்தெந்த வழிகள் இருக்கிறது.. எவ்வளவு நேரம் என்பது உள்பட பல தகவல்களை உடனே சொல்லிவிடும்

Kerala Google Maps Car

இதனால் தற்போது பெரும்பாலானோர் கூகுள் மேப்சை பார்த்தே எங்கும் செல்கிறார்கள். எனினும் ஒருசில நேரங்களில் கூகுள் மேப்சை பார்த்து சென்று, நடுவழியில் நிற்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அப்படித்தான் கேரளாவில் கூகுள் மேப்சை பார்த்து கார் ஓட்டிச்சென்ற நபர்கள் காரோடு 30 அடி உயரத்தில் இருந்து ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 57). இவர் நேற்று முன் தினம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது காரில் இவரது உறவினர்கள் 4 பேர் உடன் வந்தனர். கூகுள் மேப்சை பார்த்துக்கொண்டே காரை பாலகிருஷ்ணனின் உறவினர் சதானந்தன் ஓட்டிச் சென்றுள்ளார்.

கொண்டாழி - திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சென்றனர். எழுண்ணுள்ளத்து கடவு என்ற இந்த பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இடது பக்கம் திரும்புமாறு காட்டியதாக கூறப்படுகிறது. இரவு நேரம் என்பதாலும், அதில் பாதை இருப்பது போல் தெரிந்ததாலும் சதானந்தன் காரை திருப்பியிருக்கிறார். அருகில் சென்றபோது தான் தெரிந்தது அது பாதை இல்லை என்று.

இதையடுத்து 30 அடி உயரமான அந்த பாலத்தில் இருந்து கார் ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றில் 5 அடிக்கு தண்ணீர் சென்றது. இதனால் காரோடு அதில் இருந்த 5 பேரும் தத்தளித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் ஆற்றில் குதித்து, காரில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்டனர். எனினும் இந்த விபத்தில் 5 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

கூகுள் மேப்சை பார்த்து ஓட்டிச்சென்றதில் கார் ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து அறிந்ததும் பழயன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் ஆற்றில் மூழ்கிய கார் பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+