அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம்... மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நின்றது
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தனின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான தலைவலி காரணமாக அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், அச்சுதானந்தன் உடல்நிலை தேறிவருவதாக கூறியுள்ளனர்.

வயது மூப்பு நோய்
கேரள அரசியலில் முக்கியத் தலைவர், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டவர் வி.எஸ்.அச்சுதானந்தன். அண்மைக்காலத்தில் வயது மூப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது.

கடும் தலைவலி
கடந்த சனிக்கிழமை இரவு அச்சுதானந்தனுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. கூடவே கடுமையான தலைவலியும் எற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யூ.டி.ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை
அச்சுதானந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதையும் கண்டறிந்து தீவிர சிகிச்சையை தொடங்கினர். மேலும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்தும் வந்தது.

ரத்தக்கசிவு நின்றது
கடந்த 2 நாட்களாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததன் விளைவாக மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அச்சுதானந்தன் உடல்நிலை தேறி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அனுமதியில்லை
அச்சுதானந்தன் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் குவியத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவரை காண மருத்துவமனை நிர்வாக அனுமதி மறுத்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications