கேரளாவில் பரவும் 'வாக்கிங் நிமோனியா" குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும்.. அறிகுறிகள் என்ன?
திருவனந்தபுரம்: கேரளாவில் வாக்கிங் நிமோனியா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதாகவும், இதுவரை 5 வயது முதல் 17 வயதுடையவர்களுக்கு மட்டுமே பரவி வந்த நிலையில் தற்போது குழந்தைகளுக்கும் இந்த நோய்த்தொற்று பரவுவதாக கேரள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் முக கவசம் அணிவதன் மூலம் இந்த தொற்று பரவாமல் இருக்க முடியும் என்றும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளாவில் குழந்தைகள் மத்தியில் "வாக்கிங்க் நிமோனியா" நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. குளிர் கால சீசன் தொடங்கிவிட்டதால் வழக்கம் போல் சளி, இருமல் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனினும், இயல்பை விட அதிகமான குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருந்ததையடுத்து ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், பாதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலருக்கு மைக்கோ பிளாஸ்மா எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியா தொற்று எனக் கண்டறியப்பட்டுள்ளது. 5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த வாக்கிங்க் நிமோனியா பாதிப்பு முதலில் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது 5 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரிதாக பெரியவர்களையும் சில நேரம் இந்த நிமோனியா தாக்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வாக்கிங்க் நிமோனியாவின் அறிகுறிகள் என்று பார்த்தால், லேசான காய்ச்சல், நீடித்த இருமல், மூச்சு விடுவதில் சிரமம், தொண்டை வலி, தோலில் தடிப்புகள் ஆகியவை ஏற்படும். இருமல் 5 நாட்களுக்கு மேலாக நீடித்தால் மருத்துவரை உடனடியாக சென்று ஆலோசனை பெறுவது அவசியம் எனவும் சுகாதாரத்துறை வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எப்படி பரவும்?
மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பெரும்பாலானோருக்கு நுரையீரல் தொற்றை ஏற்படுத்தக்கூடியது. பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும் தும்மும் போது வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று மூலமாக இந்த நோய் பரவக்கூடியது.
எனவே இத்தகைய அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் மாஸ்க் அணிவது அவசியம் என்று கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் செல்லும் போதும், பள்ளிகள், டியூஷன் செண்டர்களுக்கு சென்றாலும் குழந்தைகளுக்கு அவசியம் மாஸ்க் அணிவிப்பது நல்லது எனவும் கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications