நிலச்சரிவு+ கனமழை.. கேரளாவில் பல ரயில்கள் ரத்து.. தமிழகத்திற்கு வரும் ரயில்களும் ரத்து.. முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் வயநாட்டில் மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தவிர அங்கே மாநிலம் முழுக்க மிக மோசமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதற்கிடையே அங்கே கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், சில ரயில்கள் முழுமையாகவும் பல ரயில்கள் பகுதி தூரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் பல ரயில்கள் தமிழகம் வரும் ரயில்களாகும். இது குறித்து நாம் பார்க்கலாம்.

கேரள மாநிலத்தில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

Wayanad Landslide kerala

இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் கேரள முழுக்க கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழை காரணமாகக் கேரளா முழுவதும், பல ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் பகுதி தூரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ரயில்கள் ரத்து: ஷோரனூர் - திருச்சூர் இடையே அனைத்து ரயில் சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. எர்ணாகுளம்-கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சூரில் வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருநெல்வேலி -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா வரை மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: குருவாயூர் - திருச்சூர், திருச்சூர் - குருவாயூர், ஷோரனூர் - திருச்சூர், மற்றும் திருச்சூர் - ஷோரனூர் டெய்லி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்: வளத்தோல் நகர் மற்றும் வடகாஞ்சேரி இடையே தண்ணீர் தேங்கியுள்ளதால் பல ரயில்கள் பாதி தூரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் எண். 16305 எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருச்சூரில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 16791 திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ஆலுவா வரை மட்டுமே இயக்கப்படும்

ரயில் எண். 16302 திருவனந்தபுரம் - ஷோரனூர் வேணாடு எக்ஸ்பிரஸ் சாலக்குடியில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 12081 கண்ணூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 16308 கண்ணூர் - ஆலப்புழா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 16649 மங்களூரு சென்ட்ரல் - கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 16326 கோட்டயம் - நிலம்பூர் சாலை எக்ஸ்பிரஸ் அங்கமாலியில் நிறுத்தப்படும்.

ரயில் எண். 12075 கோழிக்கோடு - திருவனந்தபுரம் சென்ட்ரல் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் கோழிக்கோட்டுக்குப் பதிலாக எர்ணாகுளத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும்

ரயில் எண். 16650 கன்னியாகுமரி - மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் இயக்கப்படும்.

ரயில் எண். 16325 நிலம்பூர் சாலை - கோட்டயம் எக்ஸ்பிரஸ் அங்கமாலியில் இருந்து மட்டுமே இயக்கப்படும்.

ரயில் எண். 16301 ஷோரனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் வேணாடு விரைவு ரயில், ஷோரனூர் ஜங்ஷனுக்கு பதிலாக சாலக்குடியிலிருந்து சேவையைத் தொடங்கும்.

ரயில் எண். 16307 ஆலப்புழா - கண்ணூர் ஆலப்புழாவிற்குப் பதிலாக ஷோரனூரில் இருந்து சேவையைத் தொடங்கும்.

ரயில் எண். 16792 பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் 30.7.24 பாலக்காடுக்குப் பதிலாக ஆலுவாவிலிருந்து சேவையைத் தொடங்கும்.

ரயில்கள் மாற்றம்: இவை தவிர கோழிக்கோடு-திருவனந்தபுரம் ஜன் சதாப்தி எர்ணாகுளம் தெற்கில் இருந்தும், கன்னியாகுமரி-மங்களூரு எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் இருந்தும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலம்பூர் ரோடு-கோட்டயம் ரயில் அங்கமாலியிலிருந்தும், ஷோரனூர்- திருவனந்தபுரம் ரயில் ; சாலக்குடியிலிருந்தும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ஷோரனூரில் இருந்தும் பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி ரயில் ஆலுவாவில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+