தோண்ட தோண்ட உடல்கள்! சிதறிய உடல் பாகங்கள்! பூமியில் புதையுண்டவர்களை கண்டறிய புது டெக்னிக்! சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளா நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் இடிபாடுகளில் யாரேனும் புதைந்துள்ளனரா என்பதை அறிய தெர்மல் ஸ்கேன்னர் கொண்டு சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை காரணமாக வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடரில் ஏராளமானோர் காணாமல் போனார்கள்.

Wayanad Landslide

முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். தோண்ட தோண்ட உடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நிலச்சரிவு ஏற்படும் என முன்னெச்சரிக்கையாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஆபத்தான இடங்களில் உள்ளவர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு பாதுகாப்பான ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அங்கு நடந்த நிலச்சரிவில் அந்த பள்ளியும் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது.

இது போல் நிவாரண முகாம்களாக செயல்பட்ட இடங்கள் எல்லாம் இப்படி நிலச்சரிவில் சிக்கின. ஆயிரக்கணக்கானோர் மாயமான நிலையில் அவர்கள் மண்ணுக்குள் புதையுண்டனரா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றும் 4ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை மோப்ப நாய்களை கொண்டு மீட்பு படையினர் தேடி வந்தனர்., அது போல் ரேடார் கொண்ட டிரோன்கள், தெர்மல் ஸ்கேனர் கொண்டும் தேடும் பணிகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த தெர்மல் ஸ்கேனர் 3 மீட்டர் அல்லது 12 அடி ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதையும் ஸ்கேன் செய்து காட்டும் திறன் கொண்டது. சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கியிருந்தால் கூட இந்த தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் கண்டறிய முடியும். எனவே இந்த ஸ்கேனரை கொண்டு மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு பள்ளி, சூரல்மலையில் உள்ள வெள்ளர்மலா அரசு பள்ளி ஆகியன நிலச்சரிவில் கடுமையாக சேதமடைந்தன. இந்த இரு பள்ளிகளிலும் 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 மாணவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் சூரல்மலை பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும் முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 1 ஜிபி இலவச டேட்டா ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் 2 மாதங்களுக்கான கட்டணத்தையும் அடுத்த மாதம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை ரிசாட் சார் (RISAT SAR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை இஸ்ரோ வழங்கி உள்ளது. இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+