"சினை ஆட்டை".. கதற கதற.. அதுவும் ஹோட்டலுக்குள்.. 3 வெறியர்கள்.. சிக்கிய ஒருவர் யார் தெரியுமா?
: 3 இளைஞர்கள் 4 மாத சினை ஆட்டை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்
திருவனந்தபுரம்: 4 மாத சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
கடந்த சில காலமாகவே, மிருகங்களையும் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.. நாய், கன்றுக்குட்டி என்று காமுகர்கள் எதையும் விட்டு வைப்பதில்லை.
ஒரு நாய்க்கு எதிரான மிருகத்தனம் என்றும், பலர் விலங்குகளை மதிக்காததுதான், இதுபோன்ற பாலியல் நிகழ்வுகளுக்கு காரணம் என்பதால், இதுபோன்ற கொடூர குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஏராளமான கோரிக்கைகளை விடுத்தபடியே உள்ளனர்.

பலாத்காரம்
மிருகங்களை பலாத்காரம் செய்வது இயற்கைக்கு முரணான விஷயம் என்ற போதிலும், இது தொடர்பாக கைதாகுபவர்களின் எண்ணிக்கையும் குறைவது போல தெரியவில்லை... அதிலும் வட மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.. திருப்பூரில் கடந்த வருடம், பசு மாட்டை கடத்தி சென்று, பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் இளைஞர்கள் 3 பேர்.. ஆனால், இவர்கள் 3 பேருமே வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.. பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்..

கன்றுக்குட்டி
கடந்த மாதம்கூட, ராஜஸ்தானில் கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 4 பேர்.. இந்த 4 பேருக்குமே 20 வயதுதான் இருக்கும்.. ஒருவன் கன்றை கெட்டியாக பிடித்துக்கொள்ள, இன்னொருவன் பலாத்காரம் செய்திருக்கிறான்.. இதை மற்றொருவன் செல்போனில் வீடியோவாக படமெடுத்துள்ளான்.. இந்த 4 பேருமே கைதானார்கள்.. இப்போது ஒரு சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கொலையே செய்துள்ளனர் கொடியவர்கள்..

காசர்கோடு
கேரளாவில் காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் உள்ள ஓட்டலில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த ஓட்டலில் ஆடு ஒன்றை வளர்த்துள்ளனர்.. அது 4 மாத சினையாக இருந்துள்ளது... கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு அந்த ஆடு கதறியது.. வழக்கத்திற்கு மாறாக ஆடு நள்ளிரவில் சத்தம் போடுவதை கேட்டு அந்த ஓட்டல் ஊழியர்கள் எழுந்துச்சென்று பார்த்தனர்.. அப்போது, 3 பேர் சேர்ந்து அந்த சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்... ஊழியர்கள் திரண்டு வருவதை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

கைது
ஆனால், ஒருவரை மட்டும் ஊழியர்கள் விரட்டிச்சென்று பிடித்துவிட்டனர்.. பிடிபட்டவர் யாரென்று பார்த்தால், நம் தமிழ்நாட்டை சேர்ந்தவராம்.. பெயர் செந்தில்.. இதே ஓட்டலில்தான் வேலை பார்த்து வந்துள்ளார்.. இவரை கைது செய்த போலீசார், தப்பிச்சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்... விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்... 4 மாத சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications