திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்ன கிருமி.. கவனமா இருங்க.. ஷவர்மா சாப்பிட்ட கேரள மாணவி இறந்தது எப்படி? பரபர அட்டாப்ஸி ரிப்போர்ட்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியானது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை விவரங்கள் வெளியாகி உள்ளனர்.

Recommended Video

    சாவை வரவழைத்த ஷவர்மா… பள்ளி மாணவி பரிதாபமாக பலி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

    கேரளாவில் சமீபத்தில் காசர்கோடு மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட பலர் மயக்கம் அடைந்தனர். கிட்டத்தட்ட 40 பேர் மயக்கம் அடைந்து வாந்தி எடுத்தனர்.

    இவர்கள் எல்லோரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 16 வயது மாணவி தேவானந்தா பலியானார்.

    கொலைகளால் அதிரும் கேரளா! எஸ்டிபிஐ பிரமுகர் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை கொலைகளால் அதிரும் கேரளா! எஸ்டிபிஐ பிரமுகர் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை

    ஷவர்மா

    ஷவர்மா

    ஷவர்மா தற்போது மக்கள் இடையே மிகவும் பிரபலமாக இருக்கும் உணவு ஆகும். மாலை நேரத்தில் பல கடைகளில் வரிசையில் நின்று சாப்பிடும் அளவிற்கு ஷவர்மா பிரபலம் அடைந்துள்ளது. ருமாலி ஷவர்மா தொடங்கி ஜம்போ ஷவர்மா வரை பல வகைகள் இதில் உள்ளன. இந்த நிலையில்தான் கசர்கோர்ட்டில் Ideal Food Point என்ற கடையில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஷவர்மா குறித்த அச்சத்தை மக்கள் இடையே இது ஏற்படுத்தியது.

    அச்சம்

    அச்சம்

    இந்த நிலையில்தான் கேரளாவில் அண்ட் மாணவி பலியானது எப்படி என்று மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் ஏவி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அந்த பெண்ணுக்கு மிக மோசமான புட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். shigella எனப்படும் பாக்டிரியா கிருமி அவரின் உடலில் இருந்ததாகவும், வயிற்றில் இது அதிகம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    பிரேத பரிசோதனை

    பிரேத பரிசோதனை

    இந்த பிரேத பரிசோதனையின் முடிவில் உடலில் கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிருமி அதிக நச்சுத்தன்மை கொண்டது. குடலை பாதித்து வேகமாக உடலில் பரவ கூடியது. பொதுவாக கெட்டுப்போன உணவு, நீர் மூலம் இந்த கிருமி பரவும் வாய்ப்புகள் உள்ளன. அந்த ஷவர்மா கெட்டு போய் இருக்கலாம். நீண்ட நேரம் அதை வெப்பத்தில் வைத்து இருந்தாலும் கூட.. சமயங்களில் பழைய சிக்கன் என்றால் அது கெட்டு போய் இருக்க வாய்ப்புகள் உள்ளன.

     எப்படி பரவி இருக்கும்

    எப்படி பரவி இருக்கும்

    அதே சமயம் அந்த ஷவர்மா உடன் சேர்க்கப்பட்ட காய்கறிகளில் கூட கிருமி இருந்திருக்கலாம். அதோடு மயோஸில் கூட கிருமி இருந்திருக்கலாம். இல்லையென்றால் உணவு கொடுக்கப்பட்ட பிளேட் அல்லது அதை சர்வ் செய்த நபர் கூட கிருமியை பரப்பி இருக்கலாம். இதற்கு என்ன வேண்டுமானாலும் காரணமாக இருந்திருக்கலாம். அந்த பெண்ணுக்கு ஏற்பட்டது சாதாரண புட் பாய்சன் கிடையாது. shigella infection என்பது மிகவும் சீரியசான புட் பாய்சன் ஆகும்.

     கைது

    கைது

    இது ஏற்பட்டால் முதலில் வயிறு வலி ஏற்படும். அதன்பின் வயிற்றுப்போக்கு ஏற்படும். பின்னர் கடுமையான காய்ச்சல், வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு இது உடனே பாதிப்பை ஏற்படுத்தும். உயிரையும் கொல்லும் வாய்ப்புகள் உள்ளன. shigella infection ஷவர்மாவில் மட்டுமல்ல கெட்டு போன உணவு இதில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஷவர்மா கடைகள் இந்த சம்பவத்திற்கு பின் மூடப்பட்டு 3 பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    What is the real reason behind Shawarma death of a Kerala Student? What is the real reason behind Shawarma death of a Kerala Student? கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியானது எப்படி என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X