கடுப்பான யானை.. "இவங்க தொல்லை தாங்க முடியல.." போட்டோஷூட் ஜோடி மீது தென்னை ஓலையை வீசி.. ஜஸ்ட் மிஸ்
திருவனந்தபுரம்: நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருமணத்திற்குப் பிறகு யானைக்கு முன்பு தம்பதி ஃபோட்டோஷூட் எடுக்கப் போய் அது விபரீதமாக முடிந்தது.
இந்த டிஜிட்டல் யுகத்தில் போட்டோஷூட்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டு வருகிறது. முன்பு பிலிம் போட்டு படம் எடுத்து வந்த போது, ஒவ்வொரு ஃபோட்டோவையும் பார்த்துப் பார்த்து எடுப்பார்கள்.
ஆனால், எப்போதும் பிலிம் போய் டிஜிட்டல் வந்ததோ.. அப்போதே எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பம் புகைப்படத்துறையில் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது தான். அதற்கு மாற்றுக்கருத்து இல்லை.

போட்டோஷூட்
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் தான் ஃபோட்டோகிராபியை அனைவருக்கும் மத்தியில் பரவலாக்கியுள்ளது. அதேநேரம் ஃபோட்டோஷூட் என்ற பெயரில் இவர்கள் செய்யும் லொள்ளு சில நேரங்களில் எல்லை மீறிச் செல்கிறது என்றே சொல்லலாம். முதல் பிறந்த நாள் தொடங்கி, வண்டி வாங்கினால் ஃபோட்டோஷூட், லவ் பண்ணும்போது ஃபோட்டோஷூட், பிரேக்அப் ஆனால் போட்டோஷூட் என அனைத்தும் ஃபோட்டோஷூட் மயம்தான். அதிலும் திருமண ஃபோட்டோஷூட் பற்றி தனியாகச் சொல்லியே தீர வேண்டும்.

வெட்டிங் போட்டோஷூட்
முன்பெல்லாம் திருமண நாளில் ஃபோட்டோகிரபர்கள் வருவார்கள். அவர்கள் திருமண நிகழ்வைக் கவர் செய்வார்கள். கூடவே, திருமணத்திற்கு வாழ்த்த வந்திருப்பவர்களையும் ஃபோட்டோ எடுப்பார்கள். ஆனால், இந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட் என்ற பெயரில் இவர்கள் செய்யும் காரியம் எல்லை மீறிச் செல்லும் வகையிலேயே உள்ளது. இணையத்தில் வெளியாகும் சில ப்ரீ வெட்டிங் ஃபோட்டோஷூட்களை பார்த்தால் முகம் சுளிக்கும் வகையிலும் கூட இருக்கும்.

கேரளா
இப்படி தான் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஃபோட்டோஷூட் இருந்து வருகிறது. இதற்கிடையே நமது அண்டை மாநிலமான கேரளாவில் திருமணத்திற்குப் பிறகு கோயில்ல வைத்து சின்ன ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளனர். அப்போது நடந்த பகீர் சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. நேற்று முதலே இந்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்தச் சம்பவம் கடந்த டிச. 5ஆம் தேதி பன்மன சுப்ரமணிய சுவாமி கோயில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

கடுப்பான யானை
அன்றைய தினம அந்தக் கோயிலில் ஜெய்சங்கர்- கிரீஷ்மா தம்பதிக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் கோயிலில் வைத்து அவர்கள் போட்டோஷூட் நடத்தியுள்ளனர். அப்போது அங்கே கோயிலில் உள்ள சரவணன் என்ற யானைக்கு அருகே நின்றும் சில ஃபோட்டோக்களை எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். அவர்கள் அங்கிருந்து சில அடிகள் தான் நடந்திருப்பார்கள். அதற்குள் யானை சரவணன் என்ன நினைத்ததோ தெரியவில்லை, தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த பெரிய தென்னை இலையைத் தூக்கிப் போட்டுள்ளது.

ஜஸ்ட் மிஸ்
நல்வாய்ப்பாக, இது அந்த தம்பதியின் மீது படாமல் ஜஸ்ட் மிஸ்ஸாடிவிட்டது. அந்த தென்னை இலை மணமகனின் தோளில் உரசிச் சென்றுள்ளது. இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு நக்கலாகவே கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். போட்டோஷூட் தொல்லை தாங்காமலேயே யானை இப்படி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் சில பதிவிட்டு வருகின்றனர். இதை ஜாலியாக நாம் பார்த்தாலும் விலங்குகள் அருகே நாம் போட்டோஷூட் செய்யும் போது நாம் எந்தளவுக்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

யானை சரவணன்
இதிலும் அந்த யானை சரவணனுக்கும் மணமகள் கிரீஷ்மாவுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் பழக்கம் உள்ளதாம். யானையை எப்போது சந்தித்தாலும் எதாவது உணவைக் கொடுத்து கிரீஷ்மா குஷிப்படுத்துவார். ஆனால், இந்த முறை கிரீஷ்மா எந்தவொரு உணவையும் எடுத்து வரவில்லை. இதன் காரணமாகக் கடுப்பாகி யானை அவர்கள் மீது மட்டையை வீசியிருக்கலாம் என்றும் சில நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications